ஃப்ளாஷ் நியூஸ்

  செயிண்ட் லூயிஸ்...

  செயிண்ட் லூயிஸ்

  11/01/2018

  செயிண்ட் லூயிஸ் 1 என்று அழைக்கப்படும் இந்த கல்லறை வூடூ மகாராணியான மேரி லேவ்யூவினுடையது. இங்கே உறங்கிக் கொண்டிருக்கும் மகாராணியை எழுப்பினால் அல்லது அவரை தொந்தரவு செய்தால் பேய் பிடிக்கும் என்று அந்த மக்கள் நம்புகிறார்கள்.

   

  ...

  கேட்ட கோம்ப்ஸ்

  கேட்ட கோம்ப்ஸ்...

  11/01/2018

  பாரிசில் வாழ்ந்த மக்கள் முந்தைய காலங்களில் பயன் படுத்திய ஒரு கல்லறை வழக்கம் இது.  ரோம் நாட்டில் வாழ்ந்த மூதாதையர்கள் இந்த முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

   

  ...
  வேலி ஆஃப் கிங்க்ஸ்

  வேலி ஆஃப் கிங்க்ஸ்...

  11/01/2018

  எகிப்து நாட்டில் வாழ்ந்த அரசர் ஒருவரின் கல்லறையாக இது இருந்திருக்கிறது. மேற்சொன்ன மகாராணியின் கதையை விட இது பயங்கரமானதாக இருக்கிறது. ஒரு முறை ஆராய்ச்சியாளர்கள் இந்த இடத்தை ஆய்வு செய்வதற்காக கல்லறையிலிருந்து ஒரு கல்லை நகர்த்தியிருக்கிறார்கள். நகர்த்திய சிறிது நேரத்திலேயே அவர்களின் உயிர் பிரிந்து விட்டதாம். அதனால் உள்ளே மக்கள் அப்பகுதியையே சற்று அச்சத்துடன் தான் இருக்கிறார்கள். சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் உள்ளே சென்று புகைப்படம் எடுத்து வந்தது பயங்கரமாய் பேசப்பட்டது.

   

  ...
  சிமெண்ட்ரி கஃபே :

  சிமெண்ட்ரி கஃபே :...

  11/01/2018

  கல்லறை இருந்த பக்கமே செல்வதற்கு பயப்படும் மக்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள் என்றால் இன்னும் சிலரோ கல்லறையை தங்கள் வாழ்விடமாக மாற்றி வாழ ஆரம்பித்துவிடுவார்கள். கல்லறையில் வாழ்விடமா என்ற நம் பயத்தை காசாக்கவும் செய்கிறார்கள். அகமதாபாதில் உள்ள ஒரு கடையில் கல்லறையைச் சுற்றி ஒரு ஹோட்டலை திறந்திருக்கிறார்கள். ஆங்காங்கே கல்லறையைச் சுற்றி மக்கள் உட்கார்ந்து சாப்பிடும் இடம் சமைக்கும் இடம் இருக்கிறது. அங்கே இருக்கும் யாருக்குமே பயமேயில்லையாம். இந்த கல்லறை அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று நம்புகிறார்கள் .

   

  ...
  சிமிட்ரியோ டி சான் மிச்சேல்

  சிமிட்ரியோ டி சான் மிச்சேல்...

  11/01/2018

  இந்த இடம் இத்தாலியை ஒட்டியிருக்கும் ஒரு தீவு. பதினெட்டாம் நூற்றாண்டில் பிணங்களை இங்கே புதைக்கக் கூடாது, அது இங்கே வாழும் மனிதர்களுக்கு நன்மை கிடையாது என்று முடிவெடுக்கப்பட்டது. இதனால் பிணங்களை புதைப்பதற்கென்றே ஒரு தனித் தீவு கண்டுபிடிக்கப்பட்டு அங்கே 1807 ஆம் ஆண்டு முதல் பிணங்களை புதைத்து வந்திருக்கிறார்கள். அந்த தீவைச் சுற்றிலும் எப்போதும் பேய் மற்றும் மர்மக் கதைகள் சுற்றிக் கொண்டிருக்கும்.

   

  ...
  ஹியர் தீவு

  ஹியர் தீவு...

  08/12/2017

  ஹியர் தீவு, ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. எரிமலைகள் இருக்கும் இடத்தில் மக்கள் யாரும் வாழ விரும்புவதில்லை. அரசும் கூடவே. இந்த காரணத்தால் தனிமைப்படுத்தப்பட்ட உலகின் மற்றோர் இடம் தான் இந்த ஹியர் தீவு. இங்கே ஆக்டிவாக இன்னும் இரண்டு எரிமலைகள் இருக்கின்றன. இவை உலகின் அதிக சேதம் ஏற்படுத்தக் கூடிய எரிமலைகள் என்று கூறப்படுகின்றன.

   

  ...
  சர்ட்சே, ஐஸ்லாந்து!

  சர்ட்சே, ஐஸ்லாந்து!...

  08/12/2017

  உலகின் மனம் கவர்ந்த தீவுகளில் மிகவும் இளம் தீவு என்ற பெயர் பெற்றுள்ளது சர்ட்சே. ஐஸ்லாந்தின் தெற்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கிறது சர்ட்சே தீவு. இந்த இடத்தில் ஒருமுறை தொடர்ந்து நான்கு ஆண்டுகள் எரிமலை சிதறல் ஏற்பட்டுக் கொண்டிருந்தது எனக் கூறப்படுகிறது. எனவே, அந்த நிகழ்வில் இருந்து இந்த இடத்திற்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. இங்கே, இப்போது புவியியல் வளர்ச்சி, மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

   

  ...
  கின் ஷி ஹுவாங் சமாதி!

  கின் ஷி ஹுவாங் சமாதி!...

  08/12/2017

  சீன பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் சமாதி. இவர் தான் கியூன் சாம்ராச்சியத்தை நிறுவியவர். இந்த சமாதியை அமைத்தவர் இதனுள் பல மர்மங்களை விட்டுச் சென்றுள்ளார். அரசர் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார் என்ற நம்பிக்கையும் அக்காலத்தில் அவர்களிடம் இருந்துள்ளது. 

  சீன அரசும் இங்கே நடந்த அகழ்வாராய்ச்சியை மறைத்து வைத்துள்ளது.

  ...
  டூல்ஸ் பேஸ்!

  டூல்ஸ் பேஸ்!...

  08/12/2017

  நியூ மெக்ஸிகோ பகுதியில் அமைந்திருக்கிறது இந்த டூல்ஸ் பேஸ். இது ஒரு சிறிய பகுதி இங்கே 2600 பேர் மட்டுமே வசித்து வருகிறார்கள். இந்த இடத்திற்கு வெளியுலக மக்கள் வருகை தருவது மிகவும் அரிய நிகழ்வாக இருக்கிறது. இங்கே மனித - விலங்கு கலப்பினம், மற்றும் மனித - ஏலியன் கலப்பினம் இருப்பதாக தகவல்கள் பரவுகின்றன. 

  இந்த இடத்திற்கு வர உண்மையில் மக்கள் அஞ்சுகிறார்கள் என கூறப்படுகிறது. இங்கே கற்பனை செய்து பார்த்திட முடியாத அளவிற்கு சோதனைகள் நடந்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

  ...
  பாம்புகள் தீவு!

  பாம்புகள் தீவு!...

  08/12/2017

  பாம்புகள் தீவு என அழைக்கப்படும் இந்த இடம் பிரேசிலில் இருக்கிறது. இந்த தீவில் ஆயிரக்கணக்கான பாம்புகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான பாம்பு வகைகள் மிகவும் விஷத்தன்மையானவை. கோல்டன் லான்செட் வைப்பர் எனப்படும் உலகின் கொடிய வகை பாம்பு இங்கே அதிகமாக இருக்கிறது. ஒரே கடியில் மனிதனின் உயிரை மிக விரைவில் கொல்லும் அளவிற்கு இதன் விஷத்திற்கு தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏறத்தாழ ஐந்து மைல் சுற்றளவிற்கு இந்த பாம்புகள் இத்தீவில் படர்ந்திருக்கின்றன என கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணமாக, பிரேசில் அரசாங்கம் இந்த தீவிற்கு மனிதர்கள் செல்ல தடைவிதித்துள்ளது.

   

  ...
  வட செண்டினல் தீவு!

  வட செண்டினல் தீவு!...

  08/12/2017

  இந்த தீவு இந்தியாவின் அந்தமான் தீவுகளில் அமைந்துள்ளது. உலகின் உண்மையான அழகு என போற்றப்படும் இந்த இடத்தில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் வெளியுலகிடம் எந்த சந்தர்ப்பத்திலும் இணையக் கூடாது என்ற கருத்துடையவர்கள். தாங்களாக அழைக்காமல் யார் வந்தாலும், கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள். சுற்றுலா செல்லும் பயணிகள் இங்கே சென்று இவர்களை துன்புறுத்த முயல்வது, இவர்களைக் கேலிப் பொருளாகக் காண்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். இதனால் வெளியுலக மக்கள் என்றாலே இவர்கள் வெறுப்படைகிறார்கள். எனவே, இந்த இடத்திற்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

   

  ...
  இரகசிய ஆவணங்கள்!

  இரகசிய ஆவணங்கள்!...

  08/12/2017

  வாட்டிகன் சிட்டியில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயத்தில் போப்,  மதவாத குருக்கள் தங்குவதற்கு என தனி அறைகள் இருக்கின்றன. அது மட்டுமின்றி, அங்கே சில இரகசிய அறைகளும் உள்ளன. வியக்க வைக்கும் மாளிகையில் பல முக்கியான ஆவணங்களை இரகசியமாக பாதுகாத்து வருகிறார்கள். அதை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் தேவாலய நிர்வாகம் கவனமாக இருக்கிறது. வெகு சில அறிஞர்கள் மட்டுமே அந்த அறைக்குள் செல்ல அனுமதி பெற்றுள்ளனர்.

   

  ...
  பாறைகள் நகரும் மர்மம்!

  பாறைகள் நகரும் மர்மம்!...

  27/11/2017

  கலிஃபோர்னியாவின் மரணப் பள்ளத்தாக்குத் தேசியப் பூங்காவில், ‘ரேஸ்ட்ராக் ப்ளாயா’ என்கிற உலர்ந்த ஏரி இருக்கிறது. இந்தப் பகுதியில் கிடக்கும் கற்கள், மனிதரோ, விலங்கோ நகர்த்தாமல் தாமாகவே நகர்கின்றன என்கிறார்கள். இங்கே கிடக்கும் நூற்றுக்கணக்கான கற்களை ஒட்டியும், அவை நகர்ந்ததற்கான தடங்கள் நடைபாதைகள்போல தெரிகின்றனவாம். கற்கள் என்றால் கூழாங்கல் அளவிலிருந்து அரை டன் எடையுள்ள பெரிய பாறைகள் வரை அடங்கும். அவை நகர்ந்த தூரங்களும் வெவ்வேறு அளவில் உள்ளன. சில கற்கள், சில அடி தூரம் நகர்ந்திருக்கின்றன. 

  வேறு சில, நூறடி தூரம்கூட நகர்ந்துள்ளதாம். பெருமழைக் காலத்தில், இந்த உலர்ந்த ஏரி நீரால் நிரம்புமாம். பனிக்காலத்தில் உறைந்துவிடுமாம். இந்த மாற்றங்களால் கற்கள் நகரக்கூடும் என்று அனுமானிக்கிறார்கள். ஆனாலும், யாராலும் கற்கள் நகரும் காரணத்தை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை.

  ...