ஃப்ளாஷ் நியூஸ்

  பினாங்கு சீன வர்த்தகர் சபையின் சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் மைபிபிபி உறுப்பினர்கள்!...

  பினாங்கு சீன வர்த்தகர் சபையின் சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் மைபிபிபி உறுப்பினர்கள்!

  20/02/2018

  ஜோர்ஜ்டவுன், பிப்.21: பினாங்கு சீன வர்த்தகர் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2018 சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் பினாங்கு மாநில மைபிபிபி கட்சியின் செயற்குழுவினர் கலந்து கொண்டனர்.

  ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பொது உபசரிப்பில் சீன வர்த்தகர் சபை, பினாங்கு மாநில மைபிபிபி கட்சிக்கும் அழைப்பு விடுப்பது வழக்கமாகும்.

  அந்த வகையில் இம்முறை மாநில மைபிபிபி கட்சியின் உதவித் தலைவர் ராஜசேகரன் தலைமையில் கட்சியின் உயர்மட்ட செயற்குழுவினர் இப்பொது உபசரிப்பில் கலந்து கொண்டனர்.

  ...

  வெ. 47 கோடி செலுத்த வேண்டும் மெக்னத்திற்கு வருமான வரி நோட்டீஸ்

  வெ. 47 கோடி செலுத்த வேண்டும் மெக்னத்திற்கு வருமான வரி நோட்டீஸ்...

  22/05/2017

  ஷா ஆலம், மே 21: தேசிய உருமாற்றத் திட்டம் (டிஎன்50) தொடர்பாக நாடு தழுவிய நிலையில் நடைபெற்ற கூட்டத்தின் வாயிலாக 30,000 ஆலோசனைகள் திரட்டப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. 

  பல்வேறு தரப்பினரிடமிருந்து பெற்ற அனைத்து ஆலோசனைகளும் முழுமையாக ஆராயப்பட்டு, அவற்றில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுவதை இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சு உறுதி செய்யும் என பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ நேன்சி ஷுக்ரி கூறினார். 

  2050ஆம் ஆண்டு தொடர்பாக மலேசியர்களின் மனங்களில் உள்ள ஆசைகள் என்ன என்பதைக் கண்டறிவதற்கு 'டிஎன்50 கலந்துரையாடல்' நடத்தப்பட்டது. கிடைக்கப்பெற்ற சில ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு 2050ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

  இந்த ஆலோசனைகள் அனைத்தும் மலேசியர்களின் எதிர்பார்ப்பாகும். இவற்றிற்கு செவி சாய்க்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என யுஐடிஎம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் டத்தோஶ்ரீ நேன்சி தெரிவித்தார்.  

   

  ...
  சிறு, நடுத்தர வர்த்தகர்களுக்கு அரிய வாய்ப்பு!

  சிறு, நடுத்தர வர்த்தகர்களுக்கு அரிய வாய்ப்பு!...

  15/03/2017

  மோகன்ராஜ் வில்லவன்

  இந்திய சமுதாயத்தினர் அனைத்துத் துறைகளிலும் வெற்றி நடைபோட்டு வருவது  போல வர்த்தகத்திலும் மற்ற இனத்தவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் செழித்தோங்க வேண்டும் என்று சிலாங்கூர் ரத்னாஸ் இயக்கத்தின் முயற்சியில் ரவாங் வட்டாரத்தில் மாபெரும் இந்தியர் தொழில்முனைவர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இந்நிகழ்வுக்கு ரவாங் வர்த்தகர் மட்டுமில்லாது நாட்டிலுள்ள அனைத்து வர்த்தகர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதில் சுமார் 10 ஆயிரம் மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியர்கள் அதிகமாக வாழும் ரவாங் வட்டாரத்தில் முதன்முதலாக இந்தப் பயனான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் பவானி தெரிவித்தார்.

  இந்தியர்களிடையே வர்த்தக ஆர்வத்தை தூண்டுவதுடன் மறைந்து நிற்கும் சிறுதொழில் - நடுத்தர வர்த்தகர்களுக்கு ஒரு களம் அமைத்து மக்கள் மத்தியில் அவர்களைப் பிரபலப்படுத்தும் வகையிலேயே இந்தத் தொழில்முனைவர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

  ஆகையால், வர்த்தகத்தில் செழித்து நிற்பவர்கள் மட்டுமல்ல புதிதாக இந்தத் துறையில் கால் பதித்தவர்களும் இந்தக் கண்காட்சியில் மிகக் குறைந்த வாடகையில் கிடைக்கும் கூடாரங்களைப் பெற்று தங்களின் தயாரிப்புப் பொருட்களை அறிமுகப்படுத்தலாம் என தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் டாக்டர் பவானி கூறினார்.

  இந்தக் கண்காட்சி இம்மாதம் 25, 26ஆம் தேதிகளில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையில் ரவாங் தேசியப் பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

  இந்தக் கண்காட்சியை மேலும் அலங்கரிக்கும் வகையில் 100 கூடாரங்களை அமைத்து அனைத்து நிலை வர்த்தகர்களுக்கும் வாய்ப்பு வழங்கவுள்ளதாக எண்ணம் கொண்டிருந்தோம். ஆனால் இதுவரை 25 கூடாரங்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. நிகழ்வுக்கு குறுகியகாலம் மட்டுமே உள்ளதால் ஆர்வமுள்ள சிறு, நடுத்தர வர்த்தகர்கள் விரைந்து பதிந்து கூடாரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு இதன் நடவடிக்கை குழுத்தலைவர் அட்ரியன் சுரேஷ் தெரிவித்தார்.

  ஆகவே, இந்த அரிய வாய்ப்பை அனைத்து இந்திய வர்த்தகர்களும் பயன்படுத்தி வளமான எதிர்காலத்திற்கு வழிவகுத்துக் கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழு சார்பில் அட்ரியன் சுரேஸ் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வு குறித்தும் கூடாரங்கள் பதிவுகுறித்து 019-2414999 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

  ...
  சீனியின் விலை ஏற்றத்தால் பெரிய பாதிப்பு இல்லை -உள்நாட்டு வாணிப அமைச்சர் விளக்கம்

  சீனியின் விலை ஏற்றத்தால் பெரிய பாதிப்பு இல்லை -உள்நாட்டு வாணிப அமைச்சர் விளக்கம்...

  06/03/2017

  கோலாலம்பூர், மார்ச் 6: சீனியின் விலை கிலோ ஒன்றுக்கு 11 காசு உயர்த்தப்பட்டுள்ள விவகாரம் எவ்வித பெரிய பாதிப்புகளையும் விளைவிக்காது என்பதால், பொதுமக்கள் அவ்விகாரம் குறித்த எதிர்மறையான கருத்துகளை வெளியிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று உள்நாட்டு வாணிப, கூட்டுறவு, பயனீட்டாளர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுடின் கேட்டுக்கொண்டார். 

  சீனி விற்பனையின் வழி மொத்த வியாபாரிகளும் சில்லறை வியாபாரிகளும் பெறும் லாபம், போக்குவரத்துச் செலவு உட்பட இதர செலவினங்களையும் ஆராய்ந்த பின்னரே அமைச்சு அந்த விலை ஏற்றத்தை அமல்படுத்தியது. 

  அனைவருமே மாதம் ஒன்றுக்கு முழுமையான ஒரு கிலோ சீனியைப் பயன்படுத்துவது இல்லை. மேலும், தாய்லாந்து போன்ற இதர தென் கிழக்கு ஆசியான் நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியாவில் சீனியின் விலை இன்னும் மலிவாகவே இருந்து வருகிறது. காரணம், அந்நாடுகளில் சீனியின் விலை 3.00 வெள்ளி, அதற்கும் மேல் அமைந்துள்ளது. 

  எனவே, மலேசியாவைப் பொறுத்தவரையில் அரசாங்கம் நியாயமான அளவிலேயே சீனியின் விலையை உயர்த்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

  இதனிடையே, அனைத்துலக ரீதியில் சீனியின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, உள்நாட்டிலும் வெ. 2.84ஆக இருந்து வந்த சீனியின் விலை கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் வெ. 2.95ஆக உயர்த்தப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.

  ...
  ரசாயனத்துறையில் இந்தியா&மலேசியா கூட்டமைப்பு வணிகம் வெற்றி இந்தியத் தூதர் திருமூர்த்தி பெருமிதம்

  ரசாயனத்துறையில் இந்தியா&மலேசியா கூட்டமைப்பு வணிகம் வெற்றி இந்தியத் தூதர் திருமூர்த்தி பெருமிதம்...

  24/02/2017

  கோலாலம்பூர், பிப்.24-: இன்றைய நிலையில் ரசாயனக் கலவையற்ற பொருட்களை உற்பத்தி செய்வது சிரமமான ஒன்றாக உள்ளது. அந்த அளவிற்கு அனைத்து பொருட்களிலும் ரசாயன ஊடுருவல் நிறைந்து காணப்படுகிறது. ரசாயனக் கலவை நிறைந்த பொருட்களின் உற்பத்தியில் எவ்வித தீங்கோ பக்கவிளைவோ இல்லாமல் இருந்தாலே இன்றைய விற்பனைச் சந்தையில் நிலைத்திருக்க முடியும்.

  பொருட்களை உருவாக்குவதற்கு முன்னதாக ரசாயனம் குறித்து அறிந்து வைத்திருந்தால் மேற்கண்ட விவகாரங்களில் நாம் சிக்கித் தவிக்கும் நிலை இருக்காது என இந்தியத் தூதரகத்தின் துணைத் தூதர் நிக்கிலேஷ் கிரி தெரிவித்தார்.

  செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி தலைநகர் ரினோஸன் தங்கும் விடுதியில் நடைபெற்ற ரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பவர் - வாங்குபவர் சந்திப்புக் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர் கூறினார்.

  இந்த நிகழ்வை மலேசியாவுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி தொடக்கி வைத்து உரையாற்றுகையில். மலேசியா - இந்தியா இரு நாடுகள் உடனான கூட்டமைப்பு தொடர்ந்து வெற்றியை நிலைநாட்டி வருகிறது. அதேபோன்று வணிக மேம்பாடும் ஆண்டுதோறும் வளர்ச்சி அடைந்த வண்ணமாய் உள்ளது. அதிலும் குறிப்பாக இரு நாடுகளுக்கிடையிலான ரசாயன வளர்ச்சி அதிகளவிலான வருவாயை ஈட்டித் தருகிறது. இந்த முன்னேற்றமானது தென்கிழக்காசிய  நாடுகளுக்கான ஏற்றுமதி இறக்குமதிக்கு ஏதுவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  இதன் தொடர்பில் இந்தியாவின் முதல்தர ரசாயனங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் ஏற்பாட்டில் வரும் மார்ச் மாதம் 21, 22ஆம் தேதிகளில் ‘கேப் இந்தியா’ எனப்படும் ரசாயனம்  நெகிழி கண்காட்சி மும்பை மாநகரில் நடைபெறவிருக்கிறது. இந்தக் கண்காட்சியில் மலேசியாவில் ரசாயனத்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் கலந்து கொள்ளுமாறு கெமிஸில் நிறுவனத்தின் துணை இயக்குனர் தீபக் குப்தா கேட்டுக் கொண்டார்.

  அந்தக் கண்காட்சியில் முதல் கட்டமான சந்திப்புக் கூட்டமாக இது விளங்கியுள்ளது. இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் அனைத்துவிதமான ரசாயனம் குறித்த விளக்கங்களும் திறம்பட போதிக்கப்பட்டன. 

  இக்கருத்தரங்கில் இந்தியாவிலிருந்து 29 ரசாயன நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த நிகழ்வில் அஜெண்டா சூரியாவின் நிறுவனர் ஜெக்கா ராவ், இந்தியத் தூதரகத்தின் தலைமைச் செயலாளர் பிரம்ம குமார் உட்பட பிரமுகர்களுடன் பிரபல ரசாயனத் தொழில் வல்லுனர்கள் பலரும் கலந்து தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

  ரசாயனத்துறை குறித்தோ இந்தக் கண்காட்சி குறித்தோ மேல் விவரம் பெறவிரும்புவோர்களும் ஏற்றுமதி இறக்குமதி துறையில் ஆர்வமுள்ளவர்களும் www.capindiaexpo.in <http://www.capindiaexpo.in> என்ற இணையதளத்தின் வழி தொடர்பு கொண்டு தகவல் அறியுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

  ...
  ஏற்றுமதி அரிசிகள் விலை ஏற்றம்

  ஏற்றுமதி அரிசிகள் விலை ஏற்றம்...

  23/02/2017

  கோலாலம்பூர், பிப். 23:

  இறக்குமதி செய்யப்படும் அனைத்து ரக அரிசிகளின் விலையும் அடுத்த மாதம் தொடங்கி 5 முதல் 7 விழுக்காடு வரையில் அதிகரிக்கவிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நிலைத்தன்மையற்ற பொருளாதாரச் சூழலினால், தங்களின் இயக்கச் செலவை ஈடு செய்ய அந்த விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாக அமைந்துள்ளது என்று இறக்குமதி அரிசியின் விற்பனையாளர் தரப்பு கூறியுள்ளது.

  அதனைத் தவிர்த்து, ரிங்கிட் மதிப்பின் சரிவு, எண்ணெய் விலை ஏற்றம் ஆகிய கூறுகளும் அரிசி விலை ஏற்றத்திற்கான காரணங்களாக அமைந்துள்ளன. 35 காசு முதல் 50 காசு வரை அமைந்துள்ள அந்த விலை ஏற்றம், மிக அதிகமானது இல்லை என்றாலும், பயனீட்டாளர்களுக்கு அது சுமையாகவே கருத்தப்படுகிறது. 20 காசு ஏற்றம் என்றாலும், அது ஏற்புடையதாக அமைந்திருக்கும்.

  இதனிடையே, இந்த விலை ஏற்றம் குறித்து தங்களுக்கு தொலைபேசியின் வாயிலாக மட்டுமே தகவல் கிடைத்திருப்பதாகவும் பெர்னாஸ் எனப்படும் தேசிய அரிசி நிறுவனத்திடமிருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லை என்று விற்பனையாளர் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

   

   

  ...
  பன்றி உரோமத்திலான சாயத் தூரிகையை: வணிகர்களுக்கு அபராதம் விதிப்பது முறையல்ல!

  பன்றி உரோமத்திலான சாயத் தூரிகையை: வணிகர்களுக்கு அபராதம் விதிப்பது முறையல்ல!...

  13/02/2017

  கூச்சிங், பிப். 13: விலங்குகளின் உரோமத்தில் தயாரிக்கப்பட்ட சாயத் தூரிகை விவகாரம் தொடர்பில் வணிகர்கள் மீது அமலாக்க பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் தமக்கு உடன்பாடில்லை எனப் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

  பன்றி உரோமத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட சாயத் தூரிகைகளை பறிமுதல் செய்வதும் அதனை விற்பனை செய்த வணிகர்களுக்கு அபராதம் விதிப்பதும் சரியல்ல. மாறாக, அந்த தூரிகை எந்த விலங்கின் உரோமத்திலானது என்பதை முத்திரையிடும்படி அமைச்சு வலியுறுத்தியிருக்க வேண்டும்.

  பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் ஒருவர் மற்ற இனத்தவரை மதிக்க வேண்டும் என சுங் ஹுவா சீனப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட சீனப்புத்தாண்டு நிகழ்வின் போது அவர் சொன்னார்.   

  பல இன மக்களின் புரிந்துணர்வையும் பரஸ்பர மரியாதையையும் நிலைநிறுத்த ஒற்றுமையை பாதிக்கும் செயல்களை அரசாங்கம் ஆதரிக்காது.  

  இதனைத் தொடர்ந்து, பன்றி உரோமத்தால் தயாரிக்கப்பட்ட சாயத் தூரிகையை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை நிறுத்துமாறு கடந்த வியாழக்கிழமை, உள்நாட்டு வாணிக கூட்டுறவு பயனீட்டு அமைச்சர் டத்தோஶ்ரீ ஹம்சா ஸைனுடின் கட்டளை பிறப்பித்துள்ளார்.  

   

  10,988.94 வெள்ளி மதிப்பிலான 2,003 சாயத் தூரிகைகள் நாடு தழுவிய நிலையில் நடத்தப்பட்ட தீவிர நடவடிக்கையின் வழி கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையேநாய், பன்றி ஆகிய விலங்குகளின் உரோமத்தால் தயாரிக்கப்பட்ட சாயத் தூரிகைகளை தனித்தனியே முத்திரையிட வணிகர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  

  ...
  பெட்ரோல் விலை உயர்ந்தால் பிரிம் தொகை அதிகரிக்கப்படும்

  பெட்ரோல் விலை உயர்ந்தால் பிரிம் தொகை அதிகரிக்கப்படும்...

  13/02/2017

  கோலாலம்பூர், பிப். 12: 

  பெட்ரோலின் விலை 3 வெள்ளியாக அதிகரித்தால், 'பிரிம்' எனப்படும் ஒரே மலேசியா உதவித் தொகையை அதிகரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  'பி40' சம்பளப் பிரிவு பணியாளர்கள் எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவினங்களை அரசாங்கம் உணர்ந்துள்ளதாக நாட்டின் இரண்டாவது நிதியமைச்சரான டத்தோ ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்தார். 'பி40' பிரிவு பணியாளர்களின் தற்போதைய மாதாந்திர சம்பளம் 3,855 வெள்ளியாகும்.

  "அரசாங்கம் தொடர்ந்து பெட்ரோலின் சந்தை விலையை கண்காணிக்கும். ஒருவேளை அதன் விலை தொடர்ந்து அதிகரித்தால், நாட்டின் வருமானமும் அதிகரித்தால் அரசாங்கம் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு உதவுவது குறித்து பரிசீலிக்கும்" என்றார் அவர். 

  1,200 வெள்ளி உதவித் தொகை கூட போதாது, என்பதால் பெட்ரோல் விலை அதிகரிப்பை ஈடுசெய்யும் வகையில், அரசாங்கம் கூடுதல் உதவித் தொகையை வழங்கும். எனினும், தீவிர ஆய்வுக்குப் பின்னரே, உதவித் தொகையை அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார். 

   

  ...
  இந்திய கலாச்சார பண்பாட்டு மையத்தை தோற்றுவிக்க 2 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு

  இந்திய கலாச்சார பண்பாட்டு மையத்தை தோற்றுவிக்க 2 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு...

  10/02/2017

  சிலாங்கூர், பிப்.11: பத்துமலை திருத்தலத்தில் இந்திய கலாச்சார பண்பாட்டு மையம் ஒன்றை அமைக்க 2 மில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. இது மலேசியா வாழ் இந்துக்களுக்கு நற்செய்தியாகக் கருதப்படுகிறது. சமய சுதந்திர கோட்பாட்டின் கீழ் மலேசிய இந்துக்களின் சமய கலை கலாச்சார அம்சங்களைத் தொடர்ந்து பேண ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கத்தின் இந்நடவடிக்கை அமைந்துள்ளது.

  கலை உணர்வும் சமய கலாச்சார கலைகளும் அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு ஏதுவாக இந்த மையம் செயல்படும் என பெரிதும் நம்பப்படுகிறது. மேலும், நாட்டின் இந்திய கலாச்சார பண்பாட்டு மரபை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கும் இந்த மையம் மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க் கப்படுகிறது. இந்நிலையில், பத்துமலை திருத்தலத்தில் இந்திய கலாச்சார பண்பாட்டு மையம் ஒன்றை அமைக்க அரசாங்கம் 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை அங்கீகரித்துள்ளதை ம.இ.கா. வரவேற் றுள்ளது. அத்திட்டத்தின் அமலாக்கத்திற்கு கட்சி முழு ஒத்துழைப்பு நல்கும் என அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் தெரிவித்தார். அரசாங்கம் வழங்கியுள்ள அந்த ஒதுக்கீடு சிறந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்திய பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு அம்சங்கள் கால மாற்றத்தினால் அழிந்து போகாமல், புதிய தலைமுறைக்கு இட்டுச் செல்லும் முயற்சிகளை வகுக்க இந்த மையம் சீரிய பங்காற்றும் என சுப்ரா நம்பிக்கை தெரிவித்தார்.

   

  ...
  வெ.80,000 கையூட்டு: தற்காப்பு அமைச்சரின் முன்னாள் சிறப்பு அதிகாரி கைது

  வெ.80,000 கையூட்டு: தற்காப்பு அமைச்சரின் முன்னாள் சிறப்பு அதிகாரி கைது...

  03/02/2017

  கோலாலம்பூர், பிப்.3: 2014ஆம் ஆண்டு 80,000 வெள்ளி கையூட்டு பெற்ற  குற்றச்சாட்டிற்காக,   தற்காப்பு அமைச்சரின் முன்னாள் சிறப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

  எனினும், தம் மீதான குற்றத்தை அவர் எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு கோரினார்.  

  தற்காப்பு அமைச்சரான டத்தோஸ்ரீ இஷாமுடின் துன் உசேனின் சிறப்பு அதிகாரியாகத் திகழ்ந்த ஸைலான் ஜவ்ஹாரி,  20,000 வெள்ளி ரொக்கமாகவும், 60,000 வெள்ளி காசோலையாகவும் கையூட்டு பெற்றுள்ளார். 

  கோலசிலாங்கூரில் அமைந்துள்ள சில பகுதிகளின் துப்புரவு பணிகளுக்கான குத்தகையைப் பெற்றுத் தந்த போதே அவர் இந்தக் கையூட்டைப் பெற்றதாக கூறப்படுகின்றது.

  இதனையடுத்து, அவர் மீது 2009-ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் படி குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது. 

  இவர் மீதான குற்றம் நிரூபிக்கப் பட்டால், 20 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறை தண்டனை,  பெற்ற லஞ்சத்தை விட 5 மடங்கு அதிகமான அபராதம், 10,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது. 

   

  ...
  ஆர்ஆர்சி கட்டண விதிப்பு: சிங்கப்பூரின் முடிவுக்கு மலேசியா மதிப்பளிக்கும்!

  ஆர்ஆர்சி கட்டண விதிப்பு: சிங்கப்பூரின் முடிவுக்கு மலேசியா மதிப்பளிக்கும்!...

  18/01/2017

  கோலாலம்பூர், ஜன. 18: சிங்கப்பூருக்குள் நுழையும் வெளிநாட்டுப் பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு விதிக்கப்படவிருக்கும் ஆர்ஆர்சி கட்டண நடைமுறையை மலேசியா வரவேற்கிறது என போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ லியோவ் தியோங் லாய் கூறினார்.

  ஜோகூரில் நுழையும் வெளிநாட்டுப் பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு மலேசியா விதித்த கட்டண விதிமுறையின் பிரதிபலிப்பாக சிங்கப்பூர் அரசாங்கம் எடுத்துள்ள இந்த ஆர்ஆர்சி கட்டண நடைமுறை குறித்து சிங்கப்பூருடன் மலேசியா பேச்சு வார்த்தை நடத்தும் என்று அவர் சொன்னார். 

  கடந்த, 1973ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அறிமுகப்படுத்திய 'விஇபி' எனப்படும் வாகன நுழைவு அனுமதியைத் தொடர்ந்து அன்று மலேசியா எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. ஆயினும், தற்போது அதற்கான சாலை கட்டணத்தை விதிக்க வேண்டும் என்ற முடிவில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜோகூரில் நுழையும் வெளிநாட்டு எண் கொண்ட வாகனங்களுக்கு 20 வெள்ளி விதிக்கப்பட்டது.  

  மலேசியா அமல்படுத்திய 'விஇபி' நடைமுறையின் வழி வெளிநாட்டு எண் கொண்ட வாகனங்களின் பதிவுக் கட்டணமாக 5 வருடங்களுக்கு 10 வெள்ளி மட்டுமே விதிக்கப்பட்டது. இந்தக் கட்டணம் சிங்கப்பூர் வாகனங்களுக்கு மட்டும் அல்லாமல் புரூணை, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் அமல்படுத்தப்படுகின்றது.

   

  மலேசியாவைப் போன்று சிங்கப்பூரும் செயல்படுத்தவிருக்கும் ஆர்ஆர்சி கட்டணம் மலேசியாவின் செயல்முறையிலிருந்து மாறுபட்டிருக்கிறது.  எனினும், சிங்கப்பூர் தரை போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ள ஆர்ஆர்சி கட்டண அமலாக்கத்தை மலேசியா மதிப்பதாக அவர் குறிப்பிட்டார். 

  ...
  சிங்கப்பூருக்குள் நுழையும் வாகனங்களுக்கு பிப்ரவரி 15 முதல் வெ. 20 கட்டணம்

  சிங்கப்பூருக்குள் நுழையும் வாகனங்களுக்கு பிப்ரவரி 15 முதல் வெ. 20 கட்டணம்...

  17/01/2017

  சிங்கப்பூர், ஜன. 17:

  பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி துவாஸ் அல்லது வூட்லெண்ட்ஸ் சோதனை சாவடிகளிலிருந்து சிங்கப்பூர் நோக்கி வரும் வெளிநாட்டு பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனைத்திற்கும் 20 வெள்ளி (6.40 சிங்கப்பூர் டாலர்) கட்டணம் விதிக்கப்படும் என்று அந்நாட்டின் தரைவழி போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

  ஆர்ஆர்சி எனப்படும் அந்தப் புதிய கட்டண நடைமுறை ஏற்கெனவே அமலில் இருந்து வாகன நுழைவு அனுமதி (விஇபி), டோல் கட்டணங்கள், நிலையான மின்னணு சாலை விலை (இஆர்பி) ஆகிய கட்டணங்களுக்கு முன் விதிக்கப்படும். அதாவது, வாகனங்கள் சோதனை சாவடிகளிலிருந்து  வெளியேறும் முன்னர், அக்கட்டணம் செலுத்த வேண்டும்.

  முன்னதாக, ஜோகூருக்குள் நுழையும் மலேசிய பதிவு எண் கொண்டிராத வாகனங்களுக்கு தலா 20 வெள்ளி கட்டணமாக வசூலிக்கப்படும் எனும் நடைமுறை கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கி அமல்படுத்தப்பட்டது. இதன் பிரதிபலிப்பாகவே சிங்கப்பூர் அரசாங்கம் இம்முடிவை எடுத்துள்ளது.  

  ஆர்ஆர்சி கட்டணத்தைச் செலுத்தத் தவறும் வாகனங்களுக்கு தலா 50 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்படும். அதே குற்றத்தை மீண்டும் செய்தால் 100 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்படும். மேலும், அபராதங்களை செலுத்தத் தவறினால், 1,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் அல்லது 3 மாதம் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

   

  ...
  லெவி கட்டணச் சுமை பயனீட்டாளர்களையே சென்றடையும்!

  லெவி கட்டணச் சுமை பயனீட்டாளர்களையே சென்றடையும்!...

  10/01/2017

  கோலாலம்பூர், ஜன.10-: அந்நியத் தொழிலாளர்களுக்கான லெவி கட்டணத்தை முதலாளிகளைச் செலுத்தச் செய்வதால், கட்டுமானப் பொருட்கள் விலையேற்றம் காணும் வாய்ப்புள்ளது. இது இறுதியில் பயனீட்டாளர்களுக்கு சுமையாக அமைந்துவிடக்கூடும் என்று மலேசிய கட்டுமானக் கலைஞர் சங்கம் கூறியது.

  அரசாங்கம் அதன் முடிவில் பிடிவாதமாக இருந்தால், இந்தக் கொள்கையின் தாக்கம் பயனீட்டாளர்களைச் சேருவதைத் தவிர்க்க இயலாது என்று அச்சங்கத்தின் தலைவர் ஃபூ செக் லீ தெரிவித்தார்.

  இந்த கொள்கை அமலாக்கத்தினால், உபரி பாகங்களின் விலை அதிகரிக்கலாம். அதன் விளைவு மொத்த கட்டுமானச் செலவினத்தை பாதிக்கலாம், இறுதியில் அந்த செலவினம் பயனீட்டாளர்களைச் சென்றடையும் என்று அவர் விளக்கமளித்தார்.

  அந்நியத் தொழிலாளர்களுக்கான லெவி கட்டணம், முதலாளிகளுக்கு பெரும் சுமையாக அமைந்துவிடும். இதன் வழி கட்டுமானத் துறை அதிக செலவினத்தை ஏற்படுத்தும். எனவே, அந்த விலை முடிவில் கட்டடத்தை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று அவர் நினைவுறுத்தினார்.

  முன் அறிவிப்பின்றி அமல்படுத்த இந்தக் கொள்கையினால், கட்டுமானத்துறைக்கு சுமார் 2 பில்லியன் வெள்ளி ஆண்டுதோறும் ஏற்படலாம் என்றும் அவர் சொன்னார்.

  ...