ஃப்ளாஷ் நியூஸ்

  செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்...

  செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்

  10/04/2018

  நியூயார்க், ஏப்.11:

  செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோவர்’ கருவியை நாசா அனுப்பியுள்ளது. அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. அது மிக மெதுவாக நகர்ந்து ஆய்வு செய்கிறது. பூமிக்கு தகவல்களை அனுப்ப அதிக நேரமாகிறது.

  அதிக எரிபொருட்களை எடுத்துக் கொள்கிறது. மேலும் இது அனுப்பும் தகவல்கள் சில நேரங்களில் சரியாக இருப்பதில்லை. எனவே இதை கைவிட விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

  அதற்குப் பதிலாக ‘ரோபோ’ தேனீக்களை அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதற்கு ‘மார்ஸ் பீஸ்’ என பெயரிட்டுள்ளனர். இவை 3 முதல் 4 சென்டி மீட்டர் வரை தான் அளவு இருக்கும்.

  இந்த தேனீ ரோபோவில் சிறிய கேமரா, சிறிய சென்சார் என்று நிறைய வசதிகள் இருக்கும். ஒவ்வொரு தேனீயிலும் ஒவ்வொரு வசதியை ஏற்படுத்தி அங்கு பறக்க வைக்கலாம். 20-க்கும் மேற்பட்ட ‘ரோபோ’ தேனீக்கள் அனுப்பப்பட உள்ளன.

  இவற்றில் சிறிது நேரம் தான் சார்ஜ் இருக்கும். இதனால் அங்கு இதனுடன் ஒரு ரோவர் அனுப்பப்பட உள்ளது. இதை வைத்து அனைத்து ரோபோக்களுக்கும் ‘சார்ஜ்’ செய்ய முடியும். எரி பொருள் செலவும் மிக குறைவாகும். இந்த ‘ரோபோ’க்கள் இன்னும் 2 வருடங்களில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட உள்ளது.

  ...

  சூரியனை நெருங்கிச் சென்று ஆராயும் விண்கலம்:  ஜூலை 31இல் பாய்கிறது!

  சூரியனை நெருங்கிச் சென்று ஆராயும் விண்கலம்: ஜூலை 31இல் பாய்கிறது!...

  09/04/2018

  வாஷிங்டன், ஏப்.10: சூரியனின் மேற்பரப்பினை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள பார்க்கெர் விண்கலம் வரும் ஜூலை மாதம் 31 ஆம் தேதி 'டெல்டா-4' ராக்கெட்  மூலம் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 

  இது சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்கு அனுப்பப்படும் முதல் விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது.  சூரியக் குடும்பத்தில் உள்ள பல கோள்களை ஆராய விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன.  சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களில் ரோவர் கருவிகள் தரையிறக்கப்பட்டும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 

  ஆனால், சூரியனை ஆராய மட்டும் இதுவரை விண்கலங்கள் அனுப்பப்படாமல் இருந்தது. சூரியனின் மேற்பரப்பை ஆராய வேண்டுமானால் அதிகளவிலான வெப்பம் மற்றும் கதீர்வீச்சு தாங்கும் விண்கலங்களை உருவாக்க வேண்டும். 

  இதற்காக தற்போது பார்க்கெர் என்ற விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா உருவாக்கியுள்ளது.  இந்த விண்கலம்  தற்போது விமானப்படை விமானம் மூலம் புளோரிடா கொண்டு செல்லப்பட்டுள்ளது.

  மிகவும் சக்தி வாய்ந்த டெல்டா 4 ராக்கெட் மூலம் இந்த விண்கலத்தை வரும் ஜூலை 31ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட பிறகு சூரியனின் ஒளி வட்டத்திலிருந்து 98 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்று வட்டப் பாதையில் சுற்றி ஆய்வை மேற்கொள்ளும்.

  இதுவரை எந்த விண்கலமும் சூரியனுக்கு இவ்வளவு நெருக்கமாக சென்றதில்லை. மிக அதிகமான வெப்பம், கதிர்வீச்சை தாங்கிக் கொண்டு இந்த விண்கலம் சூரியப் புயல் பற்றி அடிப்படை அறிவியல் தகவலை தெரியப்படுத்தும்.

   

  ...
  செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்

  செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்...

  05/04/2018

  ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, அங்கு உயிர்கள் வாழ தகுந்த சூழல் நிலவுகிறதா என இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் ஆய்வு நடத்தி வருகின்றன. 

  இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாய் கிரகத்தில் உலவி வரும் கியூரியாசிட்டி ரோவர் 2 ஆயிரம் நாட்களை நிறைவு செய்துள்ளது. 

  செவ்வாய் கிரகத்தைப் பற்றிய தகவல்களையும், புகைப்படங்களையும் இந்த விண்கலம் அனுப்பி வருகிறது. இந்நிலையில் இந்த ஆய்வை மேம்படுத்தும் விதமாக திரளான ரோபோ தேனீக்களை செவ்வாய் கிரகத்தில் உலவ விட ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கான நாசாவின் நிதி உதவியுடன் ரோபோ தேனீக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 

  செவ்வாயில் உலவுவதற்கான திறன்களுடன் உருவாக்கப்படும் இந்த ரோபோக்கள், மின்னேற்றம் மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான மையமாக கியூரியாசிட்டி இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

   

  ...
  மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு

  மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு...

  02/04/2018

  நியூயார்க், மார்ச் 31:

  அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய உடல் உறுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 'இண்டெர்ஸ்டிடியம்' (Interstitium) என்ற இந்த பாகம் தோலுக்கடியில் படர்ந்து காணப்படுகிறது. இது உடல் திசுக்களை பாதுகாக்க பயன்படுகிறது.

  இந்த உறுப்பானது உடலின் அனைத்து பாகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. நுரையீரல், ரத்தக்குழாய்கள், தசைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது உடலில் உள்ள பெரிய உறுப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது கொலாஜன், எலாஸ்டினிலால் உருவானது. அதாவது மிகவும் உறுதியாகவும், வளையும் தன்மையுடனும் உள்ளது. இது உடல் முழுவதும் உள்ள திசு புரதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து 12 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் சோதனை செய்யப்பட்டது. அனைவரின் உடலிலும் இந்த உறுப்பு உள்ளது. புற்று நோய் உடல் முழுவதும் எவ்வாறு பரவுகிறது என்பதை அறிய இந்த உறுப்பு உதவும். மேலும், புற்று நோயை கண்டுபிடிக்கவும், குணப்படுத்தவும் இது உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 

   

  ...
  பின்லாந்தில் பள்ளி ஆசிரியராக பணிபுரியும் ரோபோ

  பின்லாந்தில் பள்ளி ஆசிரியராக பணிபுரியும் ரோபோ...

  28/03/2018

  ஹெல்சிங்கி, மார்ச் 29:

  பின்லாந்தின் தென் பகுதியில் டேம்பர் என்ற நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ‘ரோபோ’க்கள் ஆசிரியர்களாக பணிபுரிகின்றன.

  இங்கு இவை மொழி ஆசிரியராக உள்ளன. இவற்றால் 23 மொழிகளைப் புரிந்து கொண்டு கற்பிக்க முடியும். ஆனால் தற்போது இவை ஆங்கிலம், பின்னிஸ் , ஜெர்மன் மொழிகள் மட்டுமே கற்றுத்தருகின்றன.

  பள்ளி குழந்தைகள் கேட்கும் கேள்விகளை புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் திருப்தி தரும் பதில்களை அவை அளிக்கின்றன. அதற்கேற்ற வகையில் அவற்றில் செயலிகள் பொருத்தப்பட்டுள்ளன.

  குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருவது மட்டுமின்றி அவர்களுடன் சேர்ந்து ‘கங்னம்‘ ஸ்டைலில் நடனம் ஆடியும் மகிழ்விக்கின்றன. இந்த ரோபோவுக்கு ‘எலியாங்’ என பெயரிடப்பட்டுள்ளது.

  இந்த ‘ரோபோ’க்கள் ஆசிரியைகளுடன் பணிபுரிகின்றன. ஒரு கருவியான ‘ரோபோ’ வகுப்பறையில் மாணவர்களுக்கு வித்தியாசமாக கல்வி கற்றுத் தருகிறது என மொழி ஆசிரியை ரிகா கொழுங்சாரா தெரிவித்தார்.

   

  ...
  இன்னும் ஒரு வாரத்தில் பூமியில் விழுகிறது சீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம்

  இன்னும் ஒரு வாரத்தில் பூமியில் விழுகிறது சீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம்...

  26/03/2018

  வாஷிங்டன், மார்ச் 27:

  விண்வெளியில் 2011ஆம் ஆண்டு டியான்காங்-1 என்ற விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை சீனா அமைத்தது. 9.4 டன் எடை கொண்ட இந்த விண்வெளி நிலையம் விண்ணில் சுற்றி தேவையான தகவல்களை அனுப்பியது. ஆனால் இப்போது அது கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் சுற்றியபடி உள்ளது. அது புவிஈர்ப்பு வட்டத்துக்குள் வந்து, மார்ச்-ஏப்ரல் மாதத்திற்கு மத்தியில் பூமியில் விழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

  பூமியை நோக்கி அதிக வேகத்தில் வரும் விண்வெளி ஆய்வு நிலையமானது, விண்வெளியில் காற்றுமண்டலத்தில் ஏற்படும் உராய்வினால் தீப்பிடித்து அதன் பெரும் பகுதி எரிந்து சாம்பலாகிவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு சில பாகங்கள் எரியாமல் பூமியில் விழக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் ஆபத்து ஏற்படலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

  இந்நிலையில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய கணிப்பின்படி, மார்ச் 30ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் டியான்காங்-1 ஆராய்ச்சி நிலையம், பூமியில் விழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் ஒரு வாரத்தில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. 

  பூமியை நோக்கி வரும் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் சில பாகங்கள் மிகப்பெரியதாக இருக்கலாம். அவை ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸ் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

   

  ...
  நேபாளத்தில் உரையாற்ற இருக்கும் உலகின் அதிநவீன ரோபோ

  நேபாளத்தில் உரையாற்ற இருக்கும் உலகின் அதிநவீன ரோபோ...

  21/03/2018

  காத்மண்டு, மார்ச் 22:

  ஹாங்காங்கை சேர்ந்த நிறுவனம் கடந்த 2015ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) கொண்ட அதிநவீன ரோபோ ஒன்றை வடிவமைத்து வெளியிட்டது. மனிதர்களைப் போன்றே தோற்றம் கொண்ட இந்த ரோபோ அமெரிக்காவில் முதன்முறையாக கருத்தரங்கு ஒன்றில் பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றியது.

  ஷோபியா என பெயரிடப்பட்ட இந்த ரோபோவுக்கு கடந்தாண்டு குடியுரிமை வழங்கி சவூதி அரேபிய அரசு பெருமைப்படுத்தியது. இந்நிலையில், இன்று நேபாளத்தின் தர்பர்மார்க் நகரில் நடக்க உள்ள ‘பொதுமக்களுக்கான தொழில்நுட்பங்கள்’ என்ற பெயரில் கருத்தரங்கு நடக்க உள்ளது.

  ஐ.நா சபையின் வளர்ச்சி திட்ட அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த கருத்தரங்கில், ஷோபியா ரோபோ பங்கேற்று உரையாற்ற உள்ளது. இதில், நேபாள அரசியல் தலைவர்கள், தொழில்நுட்ப அறிஞர்கள், திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். சிவில் சமூகம், உள்ளாட்சி அரசு, தனியார் பங்களிப்பு, இளைஞர்கள் நலன் உள்ளிட்ட பல தலைப்புகளில் பலர் உரையாற்ற உள்ளனர்.

  சிறந்த தொழில்நுட்பம் உதவியுடன் நேபாளத்தை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்வதே இந்த கருத்தரங்கின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

   

  ...
  விண்கலம் மூலம் எரிகல்லை உடைத்து நொறுக்க நாசா திட்டம்

  விண்கலம் மூலம் எரிகல்லை உடைத்து நொறுக்க நாசா திட்டம்...

  19/03/2018

  லண்டன், மார்ச் 19:

  சூரியனை ஏராளமான குறுங்கோள்கள் சுற்றி வருகின்றன. அவற்றை விண்கல் அல்லது எரிகல் என்று அழைக்கின்றோம். பூமியை நோக்கி வரும் போது அவைகள் எரிந்து சாம்பலாகின்றன. அதே நேரத்தில் சில எரிகற்கள் பூமியில் வந்து விழுகின்றன.

  அதனால் பூமியில் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. தற்போது 73 எரிகற்கள் சூரியனை சுற்றி வருவதாக நாசா விண்வெளிமையம் கண்டுபிடித்துள்ளது. அவ்றில் சில பூமியை தாக்கும் அபாயம் உள்ளது.

  தற்போது பென்னு என்ற மிகப்பெரிய எரிகல் சூரியனை சுற்றி வருகிறது. அது 1600 அடி அகலம் கொண்டது. அது மணிக்கு 63 ஆயிரம் மைல் வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது. அது தற்போது பூமியில் இருந்து 5 கோடியே 40 லட்சம் மைல் தொலைவில் உள்ளது. அது பூமியை தாக்கினால் கடும் பாதிப்பு ஏற்படும்.

  எனவே கடந்த 1999ஆம் ஆண்டு முதல் இதன் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பென்னு என்ற எரிகல்லை விண்ணிலேயே அடித்து உடைத்து நொறுக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது.

  அதற்காக மிகப்பெரிய அணு விண்கலம் தயாரிக்கப்பட உள்ளது. அதற்கு ‘கேமர்’ (சுத்தியல்) என பெயரிடப்பட்டுள்ளது. பென்னு எரிகல் மட்டுமின்றி மற்ற எரிகற்களை உடைத்து நொறுக்க இது பயன்படுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

  ...
  இனி 1 மணி நேரத்திற்குப் பின் கூட வாட்சாப் தகவல்களை அழிக்கலாம்!

  இனி 1 மணி நேரத்திற்குப் பின் கூட வாட்சாப் தகவல்களை அழிக்கலாம்!...

  14/03/2018

  கோலாலம்பூர், மார்ச் 14:

  வாட்சாப் செயலியில் இனி, அனுப்பிய தகவல்களை 1 மணி நேரத்திற்குப் பிறகு கூட அழிக்க முடியும். ஐஓஎஸ் இயங்குதளத்தில் இந்தப் புதிய மேம்பாடு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

  கடந்த 2017 அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ‘டெலிட் ஃபார் எவரிஒன் (Delete for Everyone) மேம்பாட்டின் தொடர்ச்சியாக 7 நிமிடங்களுக்குள் தகவல்களை அழிக்கும் வசதியில் இருந்து, தற்போது 1 மணி நேரம், 8 நிமிடங்கள், 16 நொடிகள் வரை அனுப்பிய தகவல்களை அழிக்க முடியும் என வாபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) டுவீட் செய்திருக்கிறது.

  எனினும், இந்த புதிய மேம்பாடு அண்ட்ரோய்டு இயங்குதளங்களுக்கு தற்போதைக்கு இல்லை. அது குறித்த மேல் விவரங்களும் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

   

  ...
  அதிவேக ஏவுகணை சோதனையை நடத்திய ரஷ்யா

  அதிவேக ஏவுகணை சோதனையை நடத்திய ரஷ்யா...

  14/03/2018

  மாஸ்கோ, மார்ச் 14:

  ரஷ்யா ‘கின்ஷால்’ எனப்படும் அதிவேக ஏவுகணையை தயாரித்துள்ளது. இது ஒலியை விட 10 மடங்கு வேகமாக பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்தது.

  இந்த ஏவுகணையை ரஷ்யா நேற்று முன்தினம் பரிசோதித்தது. 'மிக்-31 சூப்பர் சோனிக்' தடுப்பு ஜெட் விமானத்தில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

  முடிவில் இந்த சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது ரஷ்யாவின் தெற்கு ராணுவத்தில் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  ரஷ்யாவில் வருகிற 18ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் தற்போதைய அதிபர் புதின் போட்டியிடுகிறார். தேர்தலில் அவர் வெற்றி பெறும் நிலையில் கடந்த வாரம் 'கின்ஷால்' ஏவுகணை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது இது அதிநவீன முழு திறன் படைத்த ஆயுதம் என புதின் வர்ணித்தார்.

   

  ...
  சூரியனுக்கு உங்கள் பெயரையும் அனுப்பலாம்! நாசாவின் புதிய முயற்சி

  சூரியனுக்கு உங்கள் பெயரையும் அனுப்பலாம்! நாசாவின் புதிய முயற்சி...

  12/03/2018

  நாசா முதன்முறையாகச் சூரியனுக்கு மிக அருகில் செல்லும் செயற்கைக்கோளைத் தயாரித்து வருகிறது. அந்த செயற்கைக் கோளுடன் மனிதர்களின் பெயர்களையும் சேர்த்து அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா, அதற்காக விண்ணப்பங்களை அனுப்பலாம் என அறிவித்துள்ளது.

  மனித இயந்திரங்கள் இதுவரை சூரியனுக்கு அருகில் போகமுடியாத நெருக்கத்துக்குச் செல்ல, நாசா ஒரு புதிய செயற்கைக் கோளை உருவாக்கி

  வருகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செயற்கைக்கோள் வரும் கோடைக்காலங்களில் விண்ணில் ஏவப்பட உள்ளது. அந்தச் செயற்கைக் கோள் சூரியனுக்கு மிக அருகில் சென்று அங்குள்ள சூழலை ஆய்வு செய்ய உள்ளது. 

  சிறிய கார் அளவுள்ள இந்தச் செயற்கை கோள் நேரடியாகச் சூரியனை சென்றடையும், இது சுமார் 40 மில்லியன் மைல் தூரம் வரை பயணிக்க உள்ளது. இதுவரை சூரியனைப் பற்றி தெரியாத பல புதிய விஷயங்ளை இந்தச் செயற்கைக்கோள் கண்டறியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

  இதனுடன் ஒரு புதிய முயற்சியையும் நாசா மேற்கொள்ள உள்ளது. இந்தச் செயற்கைக்கோளுடன் ஒரு சிறிய சிப் பொருத்தப்பட்டு அதில் மனிதர்களின் பெயர்களைப் பதிவு செய்து சூரியனுக்கு அருகில் அனுப்பப்போகிறார்கள். 

  இதற்காக மக்கள் தங்களின் பெயர்களையோ தனக்குப் பிடித்த பெயர்களையோ இணையத்தில் பதிவு செய்யலாம் என நாசா அழைப்பு விடுத்துள்ளது. இதை ஏப்ரல் 27ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் எனவும் கூறியுள்ளது.

   

  ...
  செயற்கைக்கோளை விண்ணிற்கு செலுத்த உதவும் உலகின் மிகப் பெரிய விமானம்

  செயற்கைக்கோளை விண்ணிற்கு செலுத்த உதவும் உலகின் மிகப் பெரிய விமானம்...

  02/03/2018

  கலிபோர்னியா, மார்ச் 3:

  அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் உலகின் மிகப்பெரிய விமானத்தை உருவாக்கி சாதனைப்படைத்துள்ளது. இந்த விமானம் செயற்கைக்கோள்களை விண்ணிற்கு செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இரட்டை உடற்பகுதி கொண்ட இந்த விமானத்தின் இறக்கைகள் கால்பந்து மைதானம் அளவிற்கு மிக நீளமாக உள்ளன.

  ஸ்ட்ரடோலாஞ்ச் எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் 250 டன் எடை மற்றும் 117 மீட்டர் நீளம் கொண்டது. 6 மிகப்பெரிய இஞ்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 6 எரிபொருள் தொட்டி உள்ளது. அவை அனைத்தும் தனித்தனியாக நிரப்பப்பட்டு சரியாக செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. 

  கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானத்தை குறைந்த வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. முழு சோதனை முடிவடைந்த பின் வருகின்ற ஜூன் மாதம் தொடக்கத்தில் ஸ்ட்ரடோலாஞ்ச் விமானம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

   

  ...
  ஊழல் குறித்து தகவல்களை தெரிவிக்க புதிய ரோபோட்

  ஊழல் குறித்து தகவல்களை தெரிவிக்க புதிய ரோபோட்...

  22/02/2018

  உலகில் அனைத்து பணிகளையும் மனிதர்களை விட விரைவாகச் செய்ய ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு பல்வேறு துறைகளில் அசத்தி வரும் ரோபோக்கள் தற்போது மனிதர்கள் செய்யும் ஊழலை கண்டுபிடிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளன. அத்தகைய ரோபோட்டை ஸ்பெயின் நிபுணர்கள் தயாரித்துள்ளனர்.

  அந்நாட்டில் உள்ள வல்லாடோலித் பல்கலைக்கழகம் இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்த ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோட்டிடம் நாம் சந்தேகப்படும் வியாபாரம் குறித்தோ, திட்டம் குறித்தோ தகவல் கொடுத்தால் அதில் ஊழல் நடந்து இருக்கிறதா? இல்லையா? என்பது கண்டறியப்படும். இந்த ரோபோட்டில் இதுவரை நடந்த பல்வேறு ஊழல்கள் குறித்த தகவல்கள் அடங்கியிருக்கும்.

  அதையும், நாம் கொடுக்கும் தகவலையும் அது சரிபார்க்கும். அதேபோல் அந்த தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, அந்த கட்சியின் செயல்பாடு, அவர் பேசியது, அந்த ஊழல் குறித்து அவர் கூறியது என அனைத்தையும் அந்த ரோபோட் சரிபார்க்கும். இதன்மூலம் ஊழல் கண்டுபிடிக்கப்படும்.

  இந்த ரோபோட் தவறு எவ்வளவு நடந்திருக்க வாய்ப்பு இருக்கும் என்று சதவிகிதம் கொடுக்கும். 70 சதவிகிதத்திற்கு அதிகமாக இருந்தால் கண்டிப்பாக ஊழல் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ரோபோவில் ஸ்பெயினில் கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து நடந்த ஊழல் குறித்த தகவல்கள் மெமரியில் ஏற்றப்பட்டுள்ளது.

  ...