ராகாவில் செட்டிஙா...? ரிம 3,000 வரை வெல்லும் அரிய வாய்ப்பு!...

ராகாவில் செட்டிஙா...? ரிம 3,000 வரை வெல்லும் அரிய வாய்ப்பு!

20/04/2018

எதிர்வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தொடக்கம் மே 4-ஆம் தேதி வரை ராகாவில் செட்டிஙா? எனும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்களுடைய ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டியில் ரிம 3,000 வரை வெல்லும் அரிய வாய்ப்பு காத்து கொண்டிருக்கின்றது. 

ஒவ்வொரு திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை ராகாவின் அதிகாரப்பூர்வ முகநூல் அகப்பக்கத்தில் ராகாவின் அறிவிப்பாளர்களால் பாடப்பட்ட பாடல் காணொளிகளில் பதிவேற்றம் செய்யப்படும். 

அக்காணொளிகள் ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை பிற்பகல் 1.00 மணிக்கும் ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் மே 4-ஆம் தேதி வரை காலை 8.00 மணிக்கும் பதிவேற்றம் செய்யப்படும். 

ரசிகர்கள் அக்காணொளியைக் கண்டு களித்து ராகாவின் அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடையளித்து 100.00 வெள்ளியை வெல்லலாம். குறிப்பிட்ட நேரத்தில் யாரும் வெற்றி பெறவில்லையென்றால் அத்தொகை அடுத்த நிகழ்ச்சியின் போது பனி பந்தாகும் (Snow Balls).

மேல் விவரங்களுக்கு raaga.fm அகப்பக்கத்தை நாடுங்கள்.

 

...

தமிழ் ஸ்டேன்ட் அப் நகைச்சுவை நிகழ்ச்சி வரும் 21.4.2018

தமிழ் ஸ்டேன்ட் அப் நகைச்சுவை நிகழ்ச்சி வரும் 21.4.2018...

18/04/2018

வரும் 21.4.2018 சனிக்கிழமை 'எபிக் ஹப்' ஏற்பாட்டில் மாபெரும் தமிழ் ஸ்டேன்ட் அப் நகைச்சுவை நிகழ்ச்சி பிளாஸா 51, ஸ்டார்லைட் அரேனா பெட்டாலிங் ஜெயாவில் நடைபெறும். 

இந்நிகழ்ச்சியில் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை கலைஞரும் வானொலி அறிவிப்பாளருமான ஆர்.ஜெ.பாலாஜி ஐஸ் ஹெளஸ் டு வைட் ஹெளஸ் எனும் தலைப்பில் இந்தப் பிரமாண்ட நகைச்சுவை நிகழ்ச்சியைப் படைக்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் மண்ணின் மைந்தர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். 

தொடர்புக்கு: 010-6510204.

 

...
ஆஸ்ட்ரோ ஸ்டார் விஜய் அலைவரிசையில் நினைக்க தெரிந்த மனமே நெடுந்தொடர்

ஆஸ்ட்ரோ ஸ்டார் விஜய் அலைவரிசையில் நினைக்க தெரிந்த மனமே நெடுந்தொடர்...

17/04/2018

ரெட்டை வால் குருவி புகழ் அஸ்வின், நடிகை ஐஸ்வர்யா, நடிகை உமா ரியாஸ் மற்றும்   பலர் நடித்து விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறி கொண்டிருக்கும் மற்றும் ஓர் நெடுந்தொடர்தான் 'நினைக்க தெரிந்த மனமே'.  

நாயகி தீபா ஒரு விபத்தில் தனது நினைவை இழக்கின்றாள். இதனால் அவளுடைய கடந்த கால வாழ்க்கை அவளுக்கு ஞாபகத்தில் இல்லை. ஆனால் தீபாவுக்கு சில காட்சிகள் அடிக்கடி 'நினைவுகள்’ போல வந்து செல்ல அது அவளை உறுத்திக் கொண்டே இருக்கின்றது. 

தற்போது வசதியும் அன்பும் கொண்ட குடும்பத்துடன் சந்தோஷமான இல்லற வாழ்வை நடத்தி வரும் அவளுக்கு சில விஷயங்கள் தெரிய வர, அவள் உண்மை என்று நினைத்த வாழ்க்கை பொய் என்று தோன்றுகின்றது. அவளின் கடந்த வாழ்க்கை என்ன? அவளின் குடும்பம் எங்கே? தீபாவின் இந்த நிலைக்கு காரணம் என்ன? என்பதனை அறிய திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 09:30 மணிக்கு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் (224) இடம்பெறும் இத்தொடரை காணத் தவறாதீர்கள்.

 

...
ரஜினி படத்தில் நவாஸுதீன் சித்திக்?

ரஜினி படத்தில் நவாஸுதீன் சித்திக்?...

17/04/2018

பிரபுதேவா நடிப்பில் ‘மெர்க்குரி’ படத்தை இயக்கியுள்ள கார்த்திக் சுப்பாராஜ் இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.  அனிருத் இசையமைக்கிறார். ரஜினி நடிக்கும் படத்துக்கும் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் படத்துக்கும் முதன்முறையாக அனிருத் இசையமைக்கிறார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருக்கும் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு இப்படத்தை தொடங்க இருக்கின்றனர். இந்தப் படத்தில்,  வில்லனாக நடிக்க பல நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் இறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.  சில நாட்களுக்கு முன்பு மும்பை சென்று  நவாஸுதீனிடம் கதை சொல்லிவிட்டு திரும்பியிருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ். 

அதேசமயம் நவாசுதீன் சித்திக் தரப்பு, ரஜினி படத்தில் நடிப்பதை இன்னும் உறுதி செய்யவில்லை, அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் மகிழ்ச்சி என தெரிவித்திருக்கிறது.

...
நடிகையின் மடி மீது அமர்ந்த இயக்குநர்!

நடிகையின் மடி மீது அமர்ந்த இயக்குநர்!...

17/04/2018

சர்வதேச விருதுகளை வாங்கிய இயக்குநர் அனுராக் காஷ்யப், தமிழில் நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடி’யில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தியில் அபிஷேக் பச்சன் நடிக்கும் ‘மன் மர்ஷியான்’ படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இடைவெளியில் ஹீரோயின் டாப்ஸி ஸ்டைலாக அமர்ந்திருந்ததைப் பார்த்திருக்கிறார்.

“உன்னோட கால்கள் ரொம்ப உறுதியானது” என்று சொல்லியபடியே சடாரென்று டாப்ஸியின் மடியில் அமர்ந்துவிட்டாராம். படப்பிடிப்புக்குழு அப்படியே அதிர்ச்சியடைய, டாப்ஸியோ ரிலாக்ஸாக தன்னுடைய செல்போனில் ஒரு செல்ஃபீ எடுத்து இணையத்தில் ஏற்றிவிட்டாராம்.

...
விக்ரம் பிரபு ஜோடியாக மகிமா நம்பியார்

விக்ரம் பிரபு ஜோடியாக மகிமா நம்பியார்...

17/04/2018

ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்க உள்ள படம் அசுரகுரு. இந்த படத்திற்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில் சாட்டை, குற்றம்-23, புரியாத புதிர், கொடி வீரன், உள்ளிட்ட படங்களில் நடித்த மகிமா நம்பியார் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விக்ரம் பிரபு தற்போது பக்கா, துப்பாக்கி முனையில் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இதே போல் அருள் நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் மகிமா நம்பியார் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

 

...
ஓய்வு நேரத்தில் புத்தகம் படிக்கும் சமந்தா

ஓய்வு நேரத்தில் புத்தகம் படிக்கும் சமந்தா...

17/04/2018

சிவகார்த்திகேயனோடு நடிக்கும் ‘சீமராஜா’ படத்துக்காக சமீபத்தில் ஒரு பாடல் காட்சி சாலக்குடி அருவியில் எடுக்கப்பட்டது. அருவியில் நனைந்து ஜல்பு பிடித்துக் கொண்ட நிலையில் படப்பிடிப்புக்கு இடையில் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டாராம் சமந்தா. ‘ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டால், ‘புத்தகம் படிப்பேன்’ என்றார்.

‘என்ன புத்தகம்?’ என்று கிடுக்கிப்பிடி போட்டோம். ‘ஹலோ, நான் சும்மா கெத்துக்காக சொல்லுறேன்னு நெனைக்கிறீங்களா? மார்க் மேன்சன் எழுதின ‘ஜிலீமீ suதீtறீமீ ணீக்ஷீt ஷீயீ ஸீஷீt ரீவீஸ்வீஸீரீ ணீ யீ*நீளீ’ புக்கைத்தான் லேட்டஸ்டா படிச்சேன். அதுலே மார்க் என்ன சொல்லுறாருன்னா....’ என்று அவர் ஆரம்பிக்க, புத்தகத்தின் தலைப்பை கேட்டே தலை சுற்றிப் போனோம்.

...
உதயநிதியின் படத்தில் ஜெயராம்

உதயநிதியின் படத்தில் ஜெயராம்...

17/04/2018

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ‘கண்ணே கலைமானே’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடைபெற்றன. தற்போது அந்த வேலைகளும் முடிவடைந்து விட்டநிலையில். விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அட்லியின் உதவியாளர் ஈனாக் என்ற அறிமுக இயக்குநரின் படத்தில் நடிக்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ‘மேயாத மான்’ படத்தில் நடித்த பிரியா பவானி சங்கர் மற்றும் அதே படத்தில் வைபவ்வின் தங்கையாக நடித்த இந்துஜா ஆகிய இரவரும் நடிக்க இருக்கிறார்கள். சினிமா ஸ்டிரைக் முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு  துவங்கவிருக்கிறது.

இந்தப்படத்தில் உதயநிதியின் அப்பாவாக கார்த்திக் நடிக்கிறார் என்பது உப தகவல். புதிய தகவல். இந்தப் படத்தில் மலையாள நடிகரான ஜெயராம் தற்போது ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

...
சிபிராஜ் நடிக்கும் புதிய படம்

சிபிராஜ் நடிக்கும் புதிய படம்...

17/04/2018

2012 ஆம் ஆண்டு வெளியான ‘மதுபானக்கடை’ என்ற படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. வணிகரீதியில் அந்தப்படம் வெற்றிப்படம் இல்லை என்றாலும், மதுவின் தீமையை பொட்டில் அடித்தது போல் சொன்ன படம் அது.

ரபீக், ஐஸ்வர்யா, என்.டி.ராஜ்குமார், ‘பூ’ ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வேத் சங்கர் இசையமைத்திருந்தார். மதுபானக்கடை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கமலக்கண்ணன்.

சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் கமலக்கண்ணன். இந்தப் படத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடிக்கிறார். அருவி, மாநகரம் போன்ற தரமான படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

...
ராம் கோபால் பாணியில் கோலிவுட் இயக்குனர்

ராம் கோபால் பாணியில் கோலிவுட் இயக்குனர்...

17/04/2018

சூர்யா, விவேக் ஓபராய் நடித்த ரத்த சரித்திரம், ரங்கீலா உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா. சமீபத்தில் ஹாலிவுட் நடிகை மியா மல்கோவா நடித்த, ‘காட் செக்ஸ் ட்ரூத்’ என்ற படம் இயக்கினார். இது வெப் சீரியலாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபாணியில் தேசிய மற்றும் மாநில அளவில் விருது பெற்ற ‘மல்லி’ குறும்படத்தை இயக்கிய நிமேஷ், ‘எ ஸ்டோரி’ என்ற படம் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக ஸ்ரீனிகா நடிக்கிறார். 

நட்டி என்கிற நட்ராஜ் நடித்த கதம் கதம், இட்லி படங்களை தயாரித்த பாபு தூயவன் தயாரிக்கிறார். இதன் கிரியேட்டிவ் ஹெட் ஆக கேபிள் சங்கர் உள்ளார். ஹரி இசை. ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு. இதுபற்றி இயக்குனர் நிமேஷ் கூறும்போது,’பெண் கடவுள் வரைந்ததில் அழகான ஓவியம், தைரியமான... சொல்லப்படாத கதை உள்ளிட்ட இப்படத்தின் 3 போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பு பெற்றது. இப்படம் வெப் சீரியலாக வெளியாகவிருக்கிறது’ என்றார்.

...
ஜப்பான் நாட்டில் 100 நாள் ஓடிய பாகுபலி 2

ஜப்பான் நாட்டில் 100 நாள் ஓடிய பாகுபலி 2...

17/04/2018

இந்தியத் திரையுலகில் மிகப் பெரும் வசூல் சாதனை புரிந்த படமாக கடந்த வருடம் வெளியான ‘பாகுபலி 2’ படம் அமைந்தது. நேரடி ஹிந்திப் படங்களின் வசூலையும் முறியடித்து டப்பிங் படமான இந்தப் படம் ஹிந்தி பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்தது.

தென்னிந்திய அளவில் ரஜினிகாந்த் படங்கள் தான் இதுவரை வசூலில் சாதனை புரிந்த படங்களாக இருந்தன. அவற்றையும் முறிடியத்த பெருமை ‘பாகுபலி 2’ படத்திற்கு உண்டு. 1700 கோடி வரை வசூலித்த இந்தப் படம் ஜப்பான் நாட்டில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29ஆம் தேதி வெளியானது.

ஜப்பான் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த ‘பாகுபலி 2’ படம் கடந்த ஞாயிற்றுக் கிழமையுடன் 100ஆவது நாளை அங்கு கடந்துள்ளது. அங்கு இந்தப் படம் 13 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. படத்திற்கு பெரிய அளவில் வசூல் இல்லை என்றாலும் அங்குள்ள பெரும்பாலான ரசிகர்கள் ‘பாகுபலி 2’வின் ரசிகர்களாக மாறியிருப்பதுதான் ஆச்சரியமானது என்கிறார்கள். அடுத்து இப்படத்தை சீனாவில் வெளியிடும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளது.

...
எனது ரோல் ரசிகர்களுக்கு பிடிக்கும் - ரித்து வர்மா

எனது ரோல் ரசிகர்களுக்கு பிடிக்கும் - ரித்து வர்மா...

17/04/2018

தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் அனிதா என்ற கேரக்டரில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ரித்து வர்மா. அதையடுத்து கலையரசனுடன் சைனா, விக்ரமுடன் துருவநட்சத்திரம், துல்கர்சல்மானுடன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கவுதம் மேனனின் துருவநட்சத்திரத்தில் தனது ரோல் குறித்து ரித்துவர்மா கூறுகையில், கவுதம் மேனன் படம் என்றதும் ஆர்வமாக கமிட்டானேன். அவரது படங்களில் ஆர்ட்டிஸ்டுகளை ஸ்டைலிசாக காண்பிப்பார். நான் எதிர்பார்த்தது போலவே இந்த படத்தில் என்னை ஸ்டைலாக நடிக்க வைத்திருக்கிறார். கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் என்னை நடிக்க வைத்திருக்கிறார். எனது ரோல் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்கிறார் 

ரித்து வர்மா.

...
ஐதராபாத்தில்  அஜித்தின் விஸ்வாசம்

ஐதராபாத்தில் அஜித்தின் விஸ்வாசம்...

17/04/2018

அஜித்தின் விஸ்வாசம் படம் ஐதராபாத்தில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பிரம்மாண்ட அரங்குகள் ராமோஜி திரைப்பட நகரில் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தயாரிப்பாளர் சங்க போராட்டம் முடிந்த உடன் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது. படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விஸ்வாசம் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க டி.இமான் இசையமைக்க உள்ளார். வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கிய சிவா - அஜித் கூட்டணி மீண்டும் இந்த படத்தில் இணை ந்துள்ளனர். 

 

...