ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  பெக்கானில் வாக்களித்தார் நஜிப்

  பெக்கானில் வாக்களித்தார் நஜிப்

  09/05/2018

  img img

  பெக்கான், மே 9:
  14ஆவது பொதுத் தேர்தலில் வாக்களிக்க மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும் வேளையில், நாட்டின் தலைவர்களும் தங்களின் கடமையை ஆற்ற சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.
   
  அந்த வகையில், டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தமது தொகுதியான பெக்கானில் வாக்களித்தார். டத்தோஶ்ரீ நஜிப்புடன் அவரது தாயாரும், துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோரும் வருகை புரிந்தனர். 
   
  இதனிடையே, டத்தோஶ்ரீ நஜிப் வாக்களிப்பு மையத்தில் வாக்கு சீட்டுகளை தவறான பெட்டியில் செலுத்தியதாக புரளிகள் பரப்பப்பட்டன. டத்தோஶ்ரீ நஜிப்பின் டுவிட்டரில், அவர் சட்டமன்ற வாக்கு சீட்டை நாடாளுமன்ற வாக்குப் பெட்டியில் செலுத்துவது போல புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. இதனால், சமூக வலைத்தளவாசிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. 
   
  இதுகுறித்த விளக்கம் அளிக்கப்பட்ட போது, அந்தப் படம் புகைப்படக்காரர்களுக்கு 'போஸ்' கொடுக்க மட்டுமே எடுக்கப்பட்டது என்றும், நாட்டின் தலைவருக்கு எந்த வாக்குச் சீட்டை எந்தப் பெட்டியில் போட வேண்டும் என்றும் நன்கு தெரியும் என தெளிவுப்படுத்தப்பட்டது.

  பின்செல்