ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

   தெலுங்கு வம்சாவளியினரின் வளர்ச்சிக்கு வழிவகுத்தவர்களை  நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம்!

   தெலுங்கு வம்சாவளியினரின் வளர்ச்சிக்கு வழிவகுத்தவர்களை  நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம்!

  08/05/2018

  img img

  கோலாலம்பூர், மே 8: 

  மலேசிய வாழ் தெலுங்கு வம்சாவளியினருக்கு கடந்த 10 ஆண்டுகள் பொன்னானவையாக அமைய உதவிக்கரம் நீட்டிய அனைத்து நல்லுள்ளம் கொண்ட தலைவர்களையும் நினைத்துப் பார்ப்பதாக மலேசிய தெலுங்கு சங்கத் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் அட்சயக்குமார் தெரிவித்தார். 

  நாட்டின் மேம்பாட்டுக்கு தெலுங்கு வம்சாவளியினரின் பங்களிப்பும் அளப்பரியதாக அமைந்ததால்தான், பஞ்சாபி சமூகத்தைத் தொடர்ந்து தெலுங்கு மக்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக். 

  நமது நாட்டில் 60க்கும் மேற்பட்ட தெலுங்கு பள்ளிகள் இருந்தன. ஆனால், காலப் போக்கில் அவை காணாமல் போயின. தெலுங்கு சமூகத்தின் பெருமைகளைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த டத்தோஶ்ரீ நஜிப் தெலுங்கு மொழியையும் கலை, கலாச்சாரத்தையும் வளர்க்க செடிக் வாயிலாக மானியம் வழங்கினார். அந்த நிதியின் வாயிலாக நாடளாவிய நிலையில் 5 ஆயிரம் முதல் 7ஆயிரம் மாணவர்களுக்கு தெலுங்கு மொழி கற்பிக்கப்பட்டது. 

  ஆகையால் தெலுங்கு சங்கம் டத்தோஶ்ரீ நஜிப் தலைமைத்துவத்திற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளது என அட்சயக்குமார் தெரிவித்தார். 

  இதனிடையே, வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பது அவரவர் உரிமை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அனைத்து இன மக்களுக்கும் நன்மை புரிபவர்களுக்கு வாய்ப்பளிப்பது சிறந்த தேர்வாக அமையும் என தெலுங்கு சங்கம் கருதுவதாக அவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் சொன்னார். 

  பின்செல்