ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  சோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்!

  சோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்!

  07/05/2018

  img img

  சேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும் வாழ்கிறோம். 1957ஆம் ஆண்டு வரை வாழ்ந்த அடிமை தனத்திலிருந்து இந்நாடு விடுதலைப் பெற்றது.

   

  தலைவர்களைக் கடந்து வந்தாலும் ஆட்சியில் இனங்களுக்கு இடையிலான ஒறுமைப்பாடு, சகோதரத்துவம், புரிந்துணர்வு என்கிற கட்டமைப்புகளையும் அதே சமயத்தில் உள்நாட்டுக் குழப்பங்களையும் கட்டங்கட்டமாக சீர்படுத்தப்பட்டுள்ளன. அதேப்போல், டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களது தலைமைத்துவத்தில் ம.இ.கா வலுப்பெற்று வருவதோடு சமுதாயத்தின் தேவைகளை உணர்ந்து செயலாற்றியும் வருகின்றது.  

   

  இந்த நிலையில் உணர்ச்சிப்பூர்வமாக எடுக்கப்படும் முடிவுகளினால், ஆட்சி மாறி எதிர் மறையான சிந்தனைகள் உதித்தால், 70 ஆண்டுகளாகப் பயணித்து வந்த தேசிய முன்னணி மற்றும் ம.இ.கா நினைவுக்கு வந்தும் எந்த பயனில்லாமல் போய்விடும்.    எதிர்க்கட்சி கூட்டணியில் நமது இனத்தைப் பிரதிநிதிக்கும் கட்சிகள் இல்லை. தேசிய முன்னனி கூட்டணியில் நாம் நிரந்தரப் பங்காளி. எதிர்க்கட்சி கூட்டணியில் நாம் வெறும் தொண்டர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

   

  அப்போது, எப்படி அன்றைய சேரன், சோழன், பாண்டியன் ஆட்சியை இழந்து விட்டு, பழைய வரலாற்றை மட்டும் கண்ணீரோடு உரசிப் பார்க்க முடிகிறதோ அதே போன்ற நிலைதான் மஇகாவுக்கும் நம் சமுதாயத்திற்கும் ஏற்படும்.

   

  அதனால், மே 9 ஆம் தேதி நாம் தேசிய முன்னணிக்கும் அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள மஇகா வேட்பாளருக்கும் வாக்களித்து ஆதரிப்போம். உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல் நிதானமாக யோசித்து நமது நாட்டின் எதிர்காலத்தைச் சிறந்த முறையில் தீர்மாணிப்போம்.

  பின்செல்