ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  இன பாகுபாடு இன்றி மலேசியர்களுக்கு முன்னுரிமை!

  இன பாகுபாடு இன்றி மலேசியர்களுக்கு முன்னுரிமை!

  07/05/2018

  img img

  கெலானாங், மே 7:

  கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால், இன மற்றும் மத பாகுபாடு இன்றி மலேசியர்கள் அனைவருக்கும் உதவிக்கரம் நீட்ட தாம் தயார் என நம்பிக்கை வார்த்தை வழங்கினார் ஷாரில் ஹம்டான். 

  கோலா லங்காட் இந்தியர்களும் கல்வி, பொருளாதாரம், வர்த்தகம் ஆகிய ரீதியில் வளர்ச்சி காண வேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க தம்மால் இயலும் என தேசிய முன்னணியின் இளம் வேட்பாளரான ஷாரில் தெரிவித்தார். 

  அண்மையில் கெலானாங் கிளை மஇகா உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டபோது, ஷாரில் இவ்வாறு கூறினார். இந்தச் சந்திப்பில் மலிவு விலை வீடுகள், கல்வி மற்றும் வர்த்தக நிதியுதவி, வணிக வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. 

  இச்சந்திப்பின் வழி, கோலா லங்காட் இந்தியர்களின் தேவைகளை குறிப்பெடுத்துக் கொண்ட ஷாரில், வரும் பொதுத் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், நிச்சயம் இந்திய சமுதாயத்திற்கு நற்செய்தி உண்டு என உறுதியளித்தார்.

  பின்செல்