ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மகளிர் தொழில்முனைவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள்! ஷாரில் ஹம்டான் உறுதி

  மகளிர் தொழில்முனைவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள்! ஷாரில் ஹம்டான் உறுதி

  05/05/2018

  img img

  கோலா லங்காட், மே 5:

  கோலா லங்காட் தொகுதியில் சிறு மற்றும் நடுத்தர வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பெண் தொழில்முனைவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதை தாம் நிச்சயம் உறுதி செய்யவுள்ளதாக கோலா லங்காட் தேமு வேட்பாளர் ஷாரில் ஹம்டான் தெரிவித்தார்.

   

  பொதுத் தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாக மேற்கொண்ட ஆய்வில், பெண் தொழில்முனைவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினால், அவர்களின் வியாபாரத்தை விருத்தியடையச் செய்வதோடு, வருமானத்தை உயர்த்த முடியும் என்பது தெரிய வந்தது.

  தேசிய முன்னணி மகளிருக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளதை அதன் தேர்தல் கொள்கையறிக்கையின் வாயிலாக அறிய முடிகின்றது. தேசிய அளவில் முன்னெடுக்கப்படும் மகளிருக்கான திட்டங்களை கோலா லங்காட்டுக்கு கொண்டுவர தம்மால் முடியும் என்றார் அவர்.

   

  மேலும், தேசிய முன்னணியின் இளம் வேட்பாளரான தமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், கோலா லங்காட்டின் மேம்பாட்டையும், அனைத்து இனத்தவருக்குமான வளர்ச்சியையும்  உறுதி செய்யவுள்ளதாக அவர் வாக்குறுதி வழங்கினார்.

   

  நேற்று சுங்கை புவாயா மண்டபத்தில் ‘ஹெல்பிங் ஹேன்ட்ஸ்’ அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னையர் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஷாரில் ஹம்டான் இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார். இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

   

  இந்நிகழ்வில், இலவச மருத்துவ பரிசோதனை, இலவச சிகை அலங்காரம், சேமநிதி வாரிய சேவை ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சந்திரா சன்னாசி தெரிவித்தார்.

   

  இதனிடையே, பொதுத் தேர்தலில் முதல் தடவை வாக்களிக்கும் இளைஞர்கள் அறிவார்ந்த தேர்வை மேற்கொள்ள வேண்டும். இணையத்தில் வெளியிடப்படும் தகவல்கள் அனைத்துமே உண்மையானவை அல்ல. அவற்றை பகுத்தறிந்து, இளைஞர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் அரசுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஷாரில் அறிவுறுத்தினார்.

  பின்செல்