ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  டத்தோ லோகாவின் பதாகைகளை சேதப்படுத்துவதா?

  டத்தோ லோகாவின் பதாகைகளை சேதப்படுத்துவதா?

  04/05/2018

  img img

  சிகாம்புட், மே 4:

  சிகாம்புட் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடவிருக்கும் டத்தோ லோக பால மோகனின் பதாகைகளைச் சேதப்படுத்திய பொறுப்பற்ற தரப்பினர் மீது தாமான் கொக்டோ கிளை மசீச தலைவர் டான் ஹோய் சியூ போலீஸ் புகார் செய்தார்.

  தேமு சார்பாக போட்டியிடவிருக்கும் டத்தோ லோகாவின் தேர்தல் கொள்கைஅறிக்கை அடங்கிய பதாகைகள் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தாமான் கொக்டோ பகுதியில் பொருத்தப்பட்டது.

  அவரின் சேவையை அனைத்து மக்களும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் பொருத்தப்பட்ட இந்தப் பதாகைகளில் அவரின் படத்தை மட்டும் கிழித்துள்ளது கண்டிக்கத்தக்கது.

   

  பொதுத் தேர்தலின் போது பிரச்சாரம் செய்வது வழக்கமான ஒன்றாகும். ஆனால், அந்த பிரச்சாரங்கள் நேர்மையான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதை விடுத்து, இதுபோன்ற கீழறுப்பு வேலைகளில் ஈடுபடுவது வெறுப்பு அரசியலுக்கு வழிவகுத்து விடும் என்றார் டான் ஹோய் சியூ.

   

  இதனிடையே, இச்சம்பவம் குறித்து கருத்துரைத்த மைபிபிபி தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் சத்தியா சுதாகரன், இதுபோன்ற நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும். வேட்பாளர்களுக்கு இடையே, நேர்மறையான போட்டி இருக்க வேண்டுமே தவிர, எதிர்மறையான உணர்வுகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றார். 

  பின்செல்