ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  சுங்கை பூலோ மக்களுக்கு 3 முதன்மை செயல்திட்டங்கள்: தேமு வேட்பாளர் பிரகாஷ் ராவ் வாக்குறுதி

  சுங்கை பூலோ மக்களுக்கு 3 முதன்மை செயல்திட்டங்கள்: தேமு வேட்பாளர் பிரகாஷ் ராவ் வாக்குறுதி

  04/05/2018

  img img

  கோலாலம்பூர், மே 5:

  சுங்கை பூலோ தொகுதி மக்களின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் உறுதிசெய்ய 3 முதன்மை திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அத்தொகுதியின் தேசிய முன்னணி (தேமு) வேட்பாளர் பிரகாஷ் ராவ் உறுதியளித்தார்.

   

  14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பிரகாஷ் ராவ், தாம் வெற்றி பெற்றால் இங்குள்ள மக்களின் நலனை முன்னிறுத்தி உருமாற்ற சேவை மையத்தை அமைக்கவுள்ளதாக தெரிவித்தார்.

  இந்த சேவை மையத்தில் சுங்கை பூலோ மக்கள் தங்களின் தேவைகளைத் தெரிவிக்கலாம். கல்வி, நிதியுதவி, ஆபத்து அவசர உதவிகள் என பல சேவைகளை இம்மையம் ஒருங்கிணைக்கும்.

  நேரடியாக மையத்திற்கு வர இயலாதவர்கள், இணையம் வாயிலாக தங்களின் புகார்களைன் அல்லது கோரிக்கைகளைத் தெரிவிக்க ஒரு சிறப்பு அகப்பக்கம் அமைக்கப்படும். இதில் இணையம் வழி கல்வி, இணையம் வழி சமூகச் சேவை, இணையம் வழி வர்த்தக உதவி போன்ற இலவச சேவைகளை வழங்கப்படவிருக்கின்றன என்றும் அவர் கூறினார்.

   

  “சுங்கை பூலோ கடந்த 10 வருடங்களாக பிகேஆர் வசம் இருந்தது. ஆனால், இங்குள்ள மக்களுக்கு பெரிதாக ஏதும் செய்துவிடவில்லை. இம்முறை எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், சுங்கை பூலோ தொகுதியில் உருமாற்றத்தை நான் ஏற்படுத்தித் தருவேன்” என நேற்று தமது கொள்கையறிக்கையை வெளியிட்ட பிரகாஷ் ராவ் தெரிவித்தார்.

  “இங்குள்ள மக்கள் மாற்றத்தை எதிர்ப்பார்க்கிறார்கள். மலாய்க்காரர்கள், இந்தியர்களின் ஆதரவை நான் பெற்றுள்ளேன். கடந்த பொதுத் தேர்தலில் நான் தோல்வி கண்டிருந்தாலும், மக்கள் சேவையிலிருந்து ஒருபோதும் விடுபடவில்லை. ஆகையால், இங்குள்ள மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ளேன்” என்றும் அவர் விளக்கினார்.

  பின்செல்