ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  கோலா லங்காட் இந்தியர்களின் மேம்பாடு உறுதிசெய்யப்படும்

  கோலா லங்காட் இந்தியர்களின் மேம்பாடு உறுதிசெய்யப்படும்

  04/05/2018

  img img

  கோலா லங்காட், மே 5:

  கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினராக தாம் தேர்வுசெய்யப்பட்டால், இந்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்து தரவிருப்பதாக கோலா லங்காட் தொகுதியின் இளம் தேமு வேட்பாளர் ஷாரில் ஹம்டான் வாக்குறுதி வழங்கினார்.

  “கோலா லாங்காட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியச் சமூகம் ஆற்றியுள்ள சேவைகள் மறுக்க முடியாதவை. அவற்றை மதிக்கும் நான், இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதார, வாழ்வாதார வளர்ச்சிக்குத் துணை புரிவேன்” என்றார் அவர். 

  மலேசிய இளையோர் மன்றத்தின் கீழ் செயல்படும் இந்து இளைஞர் இயக்க ஏற்பாட்டில் கோலா லங்காட் இந்திய அமைப்புகளின் தலைவர்களுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் பேசிய ஷாரில் இவ்வாறு தெரிவித்தார்.

  இந்தச் சந்திப்பில் 20 இந்திய அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கோலா லங்காட்டில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு, சமூக உருமாற்றும் மையங்களாக கோயில்கள் செயல்பட வேண்டியதன் அவசியம், தரம் உயர்த்தப்பட வேண்டிய மின்சுடலை மையங்கள் என பல்வேறு சமூக பிரச்சினைகள் ஷாரிலின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டன. 

  இப்பிரச்சினைகளை பொறுமையாக செவிமடுத்த ஷாரில், தாம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால், நிச்சயம் இவற்றிற்கு சுமூக தீர்வை வழங்குவதாக உறுதியளித்தார். அதோடு, 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்திய சமூகத்தை சந்தித்து, அவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தம்மால் இயன்றவற்றை செய்வதாகவும் அவர் கூறினார். 

  இதனிடையே, ஷாரில் கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானால், சிறப்பு செயலகம் ஒன்று அத்தொகுதியில் அமைக்கப்படும் என தமது தேர்தல் கொள்கையறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். கல்வி கடனுதவி, வர்த்தக நிதியுதவு, ஆபத்து அவசர நிதியுதவி தேவைப்படுவோர் அச்செயலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.  

  பின்செல்