ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஊழல்: பிரிட்டன் உள்துறை மந்திரி பதவி விலகினார்

  ஊழல்: பிரிட்டன் உள்துறை மந்திரி பதவி விலகினார்

  02/05/2018

  img img

  லண்டன், மே 1:

  பிரிட்டன் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் தெரசா மே. இவரது அமைச்சரவையில் உள்துறை மந்திரியாக இருந்து வருபவர் ஆம்பர் ரூட். சமீபத்தில் எதிர்க்கட்சிகள் இவர் மீது ஊழல் புகார் சுமத்தின.

  மேலும், பிரிட்டனில் வசிப்பதற்கு சட்ட விரோதமான முறையில் குடியுரிமை அளித்தது தொடர்பான பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன எனவும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தனர். 

  இந்நிலையில், ஊழல் புகாரில் சிக்கிய உள்துறை மந்திரியான ஆம்பர் ரூட், தமது பதவியில் இருந்து நேற்று விலகினார். இதுதொடர்பாக, பிரதமர் தெரசா மேவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

  கடிதத்தை பெற்றுக் கொண்ட பிரிட்டன் பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ஆம்பர் ரூட்டின் பதவி விலகல் கடிதத்தை பிரதமர் தெரசா மே ஏற்றுக் கொண்டுள்ளார் என தெரிவித்தனர்.

  பின்செல்