ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஸ்பெயின் லா லீகா பட்டத்தை 25ஆவது முறையாக வென்றது பார்சிலோனா

  ஸ்பெயின் லா லீகா பட்டத்தை 25ஆவது முறையாக வென்றது பார்சிலோனா

  02/05/2018

  img img

  கொருனா, மே.1: ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா 25 ஆவது முறையாக லீக் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்சிலோனா 4 - 2 என்ற கோல்களில் டெப்போர்த்திவோ லா கொருனா அணியை வென்றது.

  இந்த ஆட்டத்தில் பார்சிலோனாவின் உச்ச நட்சத்திரம் லியோனெல் மெஸ்சி மூன்று கோல்களைப் போட்டு அதிரடி படைத்தார். சமநிலை கண்டால் கூட ஸ்பெயின் லீக் பட்டத்தை வெல்ல முடியும் என்ற நிலையில் பார்சிலோனா ஆட்டத்தைத் தொடங்கியது. முதல் பாதி ஆட்டத்தில் பிலிப்பே கோத்தினோ, லியோனெல் மெஸ்சி போட்ட கோல்களின் வழி பார்சிலோனா 2 -0 என்ற கோல்களில் முன்னணிக்கு சென்றது.

  முதல் பாதி ஆட்டம் முடிவடையும் தறுவாயில் லுக்காஸ் பேரேஸ், டெப்போர்த்திவோ அணியின் ஒரே கோலைப் போட்டார். 64 ஆவது நிமிடத்தில் எம்ரே கோலாக் ஆட்டத்தை சமப்படுத்தினார்.  82 ஆவது நிமிடத்தில் மெஸ்சி போட்ட கோலின் வழி பார்சிலோனா மீண்டும் முன்னணிக்குச் சென்றது.

  ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் மெஸ்சி போட்ட நான்காவது கோல் , பார்சிலோனாவின் வெற்றியை உறுதிச் செய்தது. 34 ஆட்டங்களில் 86 புள்ளிகளுடன் பார்சிலோனா தனது முதலிடத்தை உறுதிச் செய்தது. அதோடு எட்டாவது முறையாக ஒரே பருவத்தில் லா லீகா, கோப்பா டெல் ரே கிண்ணங்களை வென்று சாதனைப் படைத்துள்ளது.

  பின்செல்