ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  சாதனைகளைத் தகர்த்தெறிகிறது மென்செஸ்டர் சிட்டி

  சாதனைகளைத் தகர்த்தெறிகிறது மென்செஸ்டர் சிட்டி

  02/05/2018

  img img

  லண்டன், மே.1: இங்கிலீஷ் பிரீமியர் லீக் வெற்றியாளரான மென்செஸ்டர் சிட்டி, தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 4 - 1 என்ற கோல்களில் வெஸ்ட்ஹேம் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

  இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், மென்செஸ்டர் சிட்டி 35 லீக் ஆட்டங்களில் 102 கோல்களை மிக விரைவாகப் போட்ட அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 1931/32 ஆம் பருவத்தில் எவெர்டன் ஏற்படுத்திய சாதனையை சமப்படுத்தியுள்ளது.

  அடுத்து வரும் ஆட்டத்தில் இரண்டு கோல்களைப் போடுவதன் வழி, பிரீமியர் லீக்கில் அதிக கோல்கள் போட்ட அணி என்ற பெருமையை மென்செஸ்டர் சிட்டி பெறும். இதற்கு முன்னர் 2004/05 ஆம் பருவத்தில் பிரீமியர் லீக் பட்டத்தை வென்ற செல்சி 103 கோல்களைப் போட்டது.

  தற்போது மென்செஸ்டர் சிட்டி அந்த சாதனையை முறியடிக்க விருக்கிறது. வெஸ்ட்ஹேம் யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டியின் முதல் கோலை லெரோய் சானே போட்டார். வெஸ்ட்ஹேம் ஆட்டக்காரர் பப்லோ சபாலேத்தா போட்ட சொந்த கோலினால் மென்செஸ்டர் சிட்டி 2 -0 என்ற கோல்களில் முன்னணிக்குச் சென்றது. 

  42ஆவது நிமிடத்தில் ஏரோன் கிரேஸ்வேல் மூலம் வெஸ்ட்ஹேம் யுனைடெட் ஒரு கோலைப் போட்டிருந்தாலும் இரண்டாம் பாதியில் பெர்னான்டிண்ஹோ, கேப்ரியல் ஜீசஸ் போட்ட கோல்கள் மென்செஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதிச் செய்தன. 

  பின்செல்