ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  பெலாய்னியின் கடைசி நிமிட கோலில் மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி

  பெலாய்னியின் கடைசி நிமிட கோலில் மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி

  02/05/2018

  img img

  மென்செஸ்டர், மே.1: இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஓல்ட் டிரப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட்  2 -  1  என்ற கோல்களில் அர்செனலை வீழ்த்தியது.

  இந்த பருவத்தின் இறுதியில் அர்செனல் நிர்வாகி பொறுப்பில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் ஆர்சன் வெங்கர் , கடைசி முறையாக ஓல்ட் டிரப்போர்ட் அரங்கில் தனது அணியை களமிறக்கினார். ஓல்ட் டிரப்போர்ட்டில் பல்வேறு சுவாரசியமான அனுபவங்களைச் சந்தித்துள்ள வெங்கருக்கு , மென்செஸ்டர் யுனைடெட்டுக்கு எதிரான கடைசி ஆட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.

  ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, ஆர்சன் வெங்கரை எப்போதும் ஏளனம் செய்து வந்த மென்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள், எழுந்து நின்று கரவொலி எழுப்பி தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.

  அதேவேளையில் மென்செஸ்டர் யுனைடெட்டின் முன்னாள் நிர்வாகி சிர் அலெக்ஸ் பெர்கூசன், வெங்கருக்கு நினைவுச் சின்னம் வழங்கியபோது மொரின்ஹோவும் அந்த தருணத்தில் ஆர்சன் வெங்கருடன் கை குலுக்க, ஓல்ட் டிரப்போர்ட் அரங்கமே அதிர்ந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட்டின் முதல் கோலைப் போல் பொக்பா அடித்தார்.

  எனினும், இரண்டாம் பாதியில் ஹென்ரிக் மிக்கிதரியன் போட்ட கோலின் மூலம் அர்செனல் ஆட்டத்தை சமப்படுத்தியது. ஆட்டம் சமநிலையில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மரோன் பெலாய்னி போட்ட கோல், அர்செனலை தோல்வியுறச் செய்தது. இந்த வெற்றியின் வழி மென்செஸ்டர் யுனைடெட் அடுத்த பருவத்துக்கான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தனது இடத்தை உறுதிச் செய்துள்ளது. அதேவேளையில் அர்செனல் லீக் போட்டியை ஆறாவது இடத்தில் முடிக்கவிருக்கிறது.

  பின்செல்