ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மியான்மர் நாட்டு மக்கள் அகதிகளாக சீனாவுக்கு ஓட்டம்

  மியான்மர் நாட்டு மக்கள் அகதிகளாக சீனாவுக்கு ஓட்டம்

  02/05/2018

  img img

  யாங்கூன், ஏப்.30:

  மியான்மர் நாட்டில் ரோகிங்கியா முஸ்லிம் இன மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அவர்கள் மீது ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இதன் காரணமாக லட்சக்கணக்கான அந்த இன மக்கள் அருகில் உள்ள வங்காள தேசத்திற்கு அகதிகளாக ஓடினார்கள்.

  இந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலக நாடுகள் கண்டனம் காரணமாக தாக்குதல் நடவடிக்கைகள் குறைந்து தற்போது அமைதி நிலவி வருகிறது.

  இந்த நிலையில் வடக்கு மியான்மர் பகுதியில் உள்ள கச்சின் பகுதியில் ராணுவத்தினர் அங்குள்ள சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த பகுதியில் கச்சின் என்ற தனி இன மக்கள் உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுகிறார்கள்.

  தாங்கள் வசிக்கும் பகுதியை தன்னாட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் விதமாக ராணுவம் தாக்குதல் நடத்தியது.

  விமானம் மூலம் குண்டு வீசியதுடன், பீரங்கி தாக்குதல்களும் நடத்தினார்கள். இதில் பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் மேலும் அதிகரிக்கலாம் என்ற பயத்தில் அந்த பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள்.

  அவர் சீனாவுக்குள் நுழைவதற்காக எல்லைப் பகுதிக்கு சென்றனர். ஆனால் சீன ராணுவம் அவர்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் எல்லையிலேயே எந்த வசதியும் இல்லாமல் தங்கி உள்ளனர்.

  ஐ.நா. சபையில் அவர்களுக்கு உதவி வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. வடக்குப் பகுதியில் உடனே அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று மியான்மர் அரசுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

  பின்செல்