ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சரானார் மைக் போம்பியோ

  அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சரானார் மைக் போம்பியோ

  02/05/2018

  img img

  வாஷிங்டன், ஏப்.30:            

  அமெரிக்க வெளியுறவு அமைச்சராக சிஐஏ முன்னாள் இயக்குநர் மைக் போம்பியோ (54) பதவியேற்றார்.

  அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த ரெக்ஸ் டில்லர்சன் கடந்த மாத இறுதி யில் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். புதிய வெளியுறவு அமைச்சராக மைக் போம்பியோவை அதிபர் ட்ரம்ப் நியமித்தார். இவரது நியமனத்துக்கு செனட் அவை நேற்று ஒப்புதல் அளித்தது.

  இதைத்தொடர்ந்து, அமெரிக்காவின் 70ஆவது வெளியுறவு அமைச்சராக மைக் போம்பியோ பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சாமுவேல் அலிட்டோ பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

  மைக் போம்பியோவுக்கு அதிபர் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளா். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், "தேசப்பற்று மிகுந்தவரான போம்பியோ அதிக ஆற்றலும் புத்திக்கூர்மையும் கொண்டவர். நாடு சிக்கலான தருணத்தை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் வெளியுறவு அமைச்சகத்தை இவர் திறமையுடன் வழிநடத்துவார் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

  பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் வரும் 30ஆம் தேதி வரை பிரசல்ஸ், ரியாத், ஜெருசலேம், அம்மான் நகரங்களுக்கு போம்பியோ செல்வார் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. அமைச்சராக பொறுப்பேற்ற பின் போம்பியோ முதல் பயணமாக பெல்ஜியம் சென்றார். அங்கு பிரசல்ஸில் நடைபெற்ற நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்றார்.

  பின்செல்