ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  இங்கிலீஷ் பிரீமியர் லீக்: 3ஆவது இடத்தை தக்க வைக்க லிவர்பூல் போராட்டம்

  இங்கிலீஷ் பிரீமியர் லீக்: 3ஆவது இடத்தை தக்க வைக்க லிவர்பூல் போராட்டம்

  30/04/2018

  img img

  லிவர்பூல், ஏப்.30:

  இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடிப்பதில் லிவர்பூல் கடும் போரட்டம் நடத்த வேண்டியுள்ளது. ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அதிரடி படைத்து வரும் லிவர்பூல் பிரீமியர் லீக்கில் கடந்த இரண்டு ஆட்டங்களில் சமநிலை கண்டு அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

  பிரீமியர் லீக் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடிக்க மென்செஸ்டர் யுனைடெட்டுக்கு நெருக்குதல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட லிவர்பூல் தற்போது தனது நான்காவது இடத்தை தக்க வைக்க போராட்டம் நடத்தி வருகிறது. சனிக்கிழமை அன்பீல்ட் அரங்கில் நடந்த பிரீமியர் லீக் ஆட்டத்தில் லிவர்பூல் கோல் ஏதுமின்றி ஸ்டோக் சிட்டியுடன் சமநிலைக் கண்டது.

  கடந்த புதன்கிழமை சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தின் அரையிறுதி ஆட்டத்தில் ஐந்து கோல்களில் ஏ.எஸ் ரோமாவை வீழ்த்திய லிவர்பூல் அதே வேகத்தை பிரீமியர் லீக் போட்டியிலும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் லிவர்பூல் அணியின் தொடர் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதில் ஸ்டோக் சிட்டி தற்காப்பு அரண் வெற்றி பெற்றது.  

  அதேவேளையில் டானி இங்ஸ் போட்ட கோலையும் ஒப்சைட் காரணமாக நடுவர் நிராகரித்தார். இந்த சமநிலை முடிவை அடுத்து பிரீமியர் லீக் வெற்றியாளர் மென்செஸ்டர் சிட்டியைத் தவிர்த்து அடுத்த மூன்று இடங்களைப் பெறுவதில் மென்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர், செல்சி அணிகளுக்கு இடையில் வெளிப்படையான போட்டி நிலவுகிறது. இன்னும் இரண்டு ஆட்டங்களே எஞ்சியுள்ள வேளையில் லிவர்பூல், செல்சியையும், பிரைடன் அல்பியோன் அணியையும் எதிர்கொள்ள விருக்கிறது.

  பின்செல்