ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மீண்டும் ஏமாற மலேசிய கால்பந்து சங்கம் தயாராக இல்லை: டத்தோ முஹமட் யூசோப் மஹாடி

  மீண்டும் ஏமாற மலேசிய கால்பந்து சங்கம் தயாராக இல்லை: டத்தோ முஹமட் யூசோப் மஹாடி

  30/04/2018

  img img

  கோலாலம்பூர், ஏப்.30: மலேசிய லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் சில அணிகள் வழங்கக் கூடிய வெற்று வாக்குறுதிகளை நம்பி, மலேசிய கால்பந்து சங்கம் இனியும் ஏமாற்றம் அடையத் தயாராக இல்லை என அதன் இடைக்காலத் தலைவர் டத்தோ முஹமட் யூசோப் மஹாடி தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான மலேசிய லீக் கால்பந்துப் போட்டியில் குவாந்தான் எப்.ஏ வழங்கிய வாக்குறுதிகளில் மலேசிய கால்பந்து சங்கம் ஏமாற்றம் அடைந்திருப்பதாக யூசோப் மஹாடி தெரிவித்தார். ஆட்டக்காரர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்த்து விடுவதாக குவாந்தான் எப்.ஏ வாக்குறுதி வழங்கி இருந்தது.

  ஆனால் அந்த பிரச்சினை இன்று வரை தீர்க்கப்படவில்லை. மலேசிய லீக் கால்பந்துப் போட்டி தொடங்கும் முன்னர் அதில் பங்கேற்கும் அணிகள் தங்களை சூழ்ந்துள்ள பிரச்சினைகளைத் தீர்த்து விடுவதாக கூறுகின்றன. ஆனால் சம்பந்தப்பட்ட அணிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என அவர் சொன்னார்.

  இனி வரும் காலங்களில் சம்பந்தப்பட்ட அணிகளின் இனிப்பு வார்த்தைகளில் ஏமாற்றம் அடையப் போவதில்லை என முஹமட் யூசோப் மஹாடி தீர்க்கமாக தெரிவித்துள்ளார். ஆட்டக்காரர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்க்காத குவாந்தான் எப்.ஏ அணி இப்பருவத்துக்கான மலேசிய லீக் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அந்த அணி முதலில் பங்கேற்ற 7 ஆட்டங்களின் முடிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  பின்செல்