ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  பிரீமியர் லீக்: லெய்செஸ்டரை பந்தாடியது கிறிஸ்டல் பேலஸ்

  பிரீமியர் லீக்: லெய்செஸ்டரை பந்தாடியது கிறிஸ்டல் பேலஸ்

  30/04/2018

  img img

  லண்டன், ஏப்.30: இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் கிறிஸ்டல் பேலஸ் , 5 - 0  என்ற கோல்களில் லெய்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.  இந்த வெற்றியின் மூலம் பிரீமியர் லீக் போட்டியில் இருந்து தகுதி இறக்கம் காணும் நிலையில் இருந்து கிறிஸ்டல் பேலஸ் தப்பித்துள்ளது.

  1972ஆம் ஆண்டுக்குப் பிறகு கிறிஸ்டல் பேலஸ், பிரீமியர் லீக் போட்டியில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஆக கடைசியாக 1972 ஆம் ஆண்டில் கிறிஸ்டல் பேலஸ், 5 - 0  என்ற கோல்களில் மென்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தியது அந்த கிளப்பின் வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை வில்பிரேட் சஹா, கிறிஸ்டல் பேலசின் கோல் வேட்டையைத் தொடக்கி வைத்தார்.  17 ஆவது நிமிடத்தில் முதல் கோலைப் போட்ட சஹா, 38 ஆவது நிமிடத்தில் மக்கார்த்தர் இரண்டாவது கோலைப் போடுவதற்கு காரணமாக இருந்தார்.

  இரண்டாம் பாதி ஆட்டத்தின் 56 ஆவது நிமிடத்தில் லெய்செஸ்டர் சிட்டி ஆட்டக்காரர் மார்க் ஆல்பிரைடனுக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட,  கிறிஸ்டல் பேலஸ் மேலும் மூன்று கோல்களைப் போட்டது. 81 ஆவது நிமிடத்தில் லொப்டஸ் சீக், 84ஆவது நிமிடத்தில் பாட்ரீக் வான் ஹோல்ட், 90 ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியன் பெந்தேக்கே அந்த மூன்று கோல்களையும் போட்டனர். இந்த வெற்றியின் மூலம் 38 புள்ளிகளுடன் கிறிஸ்டல் பேலஸ் பட்டியலில் 11 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

  பின்செல்