ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஸ்காட்லாந்தின் ரேஞ்சர்ஸ் கிளப்பின் நிர்வாகி பொறுப்பை ஏற்கிறார் ஜெராட்

  ஸ்காட்லாந்தின் ரேஞ்சர்ஸ் கிளப்பின் நிர்வாகி பொறுப்பை ஏற்கிறார் ஜெராட்

  30/04/2018

  img img

  லண்டன், ஏப்.30: லிவர்பூல் கால்பந்து கிளப்பின் சகாப்தம் ஸ்டீவன் ஜெராட், ஸ்காட்லாந்தின் ரேஞ்சர்ஸ் கால்பந்து கிளப்பின் நிர்வாகி பொறுப்பை ஏற்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

  இதன் தொடர்பில் ஸ்டீவன் ஜெராட், ரேஞ்சர்ஸ் கிளப்பின் பிரதிநிதிகளுடன் மேலும் பேச்சுகளைத் தொடர்ந்து வருவதாக ஈ.எஸ்.பி.என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஜெராட்டை நிர்வாகியாக நியமனம் செய்வதில் ரேஞ்சர்ஸ் நம்பிக்கையுடன் உள்ளது. ஜெராட்டுக்கு 4 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை வழங்கவும் ரேஞ்சர்ஸ் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

  ஜெராட் தற்போது லிவர்பூல் கிளப்பின் 18 வயதுக்கு உட்பட்ட அணியை வழி நடத்துகிறார். அடுத்த வார தொடக்கத்தில் ரேஞ்சர்ஸ், ஜெராட்டை  தங்களின் நிர்வாகியாக அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் லிவர்பூலின் முன்னாள் ஆட்டக்காரர் கேரி மெக்கலிஸ்தார். அவருடன் துணை நிர்வாகி பொறுப்பை ஏற்பார் என கூறப்படுகிறது.

  பின்செல்