ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஆசிய பூப்பந்துப் போட்டி: அரையிறுதியில் சோங் வெய் தோல்வி

  ஆசிய பூப்பந்துப் போட்டி: அரையிறுதியில் சோங் வெய் தோல்வி

  30/04/2018

  img img

  வூஹன், ஏப்.30: சீனாவில் நடைபெற்று வரும் 2018 ஆசிய பூப்பந்துப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தேசிய பூப்பந்து வீரர் டத்தோ லீ சோங் வெய் தோல்வி கண்டுள்ளார். சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் சோங் வெய் ஜப்பானில் இளம் ஆட்டக்காரர் கெந்தோ மொமோத்தாவை எதிர்கொண்டார்.

  இந்த ஆட்டத்தில் சோங் வெய்,  19-21, 14-21 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டார்.  55 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சோங் வெய்யின் தோல்வி எதிர்பார்த்த ஒன்றுதான் என மலேசிய பூப்பந்து சங்கத் தலைவர் டத்தோ ஶ்ரீ நோர்சா சக்காரியா தெரிவித்துள்ளார்.  சீனாவின் ஷீ யூக்கீ,  தைவானின் சொவ் தியேன் சென் போன்ற ஆட்டக்காரர்களை வீழ்த்திய கெந்தோ மொமோத்தா தான் ஒரு பலம் வாய்ந்த ஆட்டக்காரர் என்பதை நிரூபித்துள்ளார் என சக்காரியா தெரிவித்தார். 

  மொமொத்தாவுக்கு தடை விதிக்கப்படும் முன்னர் அவர் உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  டென்மார்க்கின் விக்டர் அக்செல்சன், கெந்தோ மொமோத்தா போன்ற ஆட்டக்காரர்கள் அடுத்து வரும் 10 ஆண்டுகளில் உலக பூப்பந்து அரங்கில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஆட்டக்காரர்கள் என நோர்சா சக்காரியா கூறினார்.

  இதற்கு முன்னர் 2006, 2016ஆம் ஆண்டுகளில் ஆசிய பூப்பந்து வெற்றியாளராக வாகை சூடிய சோங் வெய் மூன்றாவது முறையாக வெற்றியாளர் பட்டத்தை வெல்ல இலக்குக் கொண்டிருந்தார். எனினும் அவரின் எண்ணம் ஈடேறவில்லை. முதல் முறையாக கெந்தோ மொத்தோவிடம் சோங் வெய் தோல்வி கண்டுள்ளார்.

  பின்செல்