ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 50 ஹவுத்தி போராளிகள் பலி

  ஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 50 ஹவுத்தி போராளிகள் பலி

  30/04/2018

  img img

  சனா, ஏப்.29:

  ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பலப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுகள் வைத்து அந்த பகுதிகைளைச் சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.

  சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.

  இந்நிலையில், ஏமன் தலைநகர் சனாவில் உள்ள ஹவுத்தி புரட்சிப் படையினரின் உள்துறை அமைச்சக கட்டிடத்தை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமான தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் ஹவுத்தி புரட்சிப் படையைச் சேர்ந்த இரு தளபதிகள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் சம்பவத்தை ஹவுத்தி படையினர் உறுதி செய்துள்ளனர். ஆனால் பலி எண்ணிக்கை குறித்து அவர்கள் செய்தி வெளியிடவில்லை.

  மத்திய கிழக்கு நாடுகளான ஏமன், சிரியா, ஈராக், லெபனானில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஈரான், சவுதி அரேபியா நாடுகள் முயற்சித்து வருகின்றன. அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் இதுவரை பத்தாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  பின்செல்