ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  பிரேசில் கால்பந்து சங்கத் தலைவருக்கு ஆயுட் காலத் தடை

  பிரேசில் கால்பந்து சங்கத் தலைவருக்கு ஆயுட் காலத் தடை

  30/04/2018

  img img

  சூரிக், ஏப்.29: பிரேசில் கால்பந்து சங்கத் தலைவர் மார்க்கோ போலோ டெல் நேரோவுக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்படுவதாக ஃபீபா எனப்படும் அனைத்துலக கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. 

  ஊழல் விவகாரத்தின் காரணமாக அவருக்கு இந்த தடை விதிக்கப்படுவதாக ஃபீபா அறிவித்துள்ளது. பிரேசில் கால்பந்து சங்கத் தலைவராக தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊடக நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களையும் வர்த்தக உரிமைகளையும் வழங்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

  இதன் வழி அவர் ஊழலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஃபீபாவின் ஒழுங்குக் குழு அறிவித்துள்ளது.  எனினும் தாம் அத்தகையை நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என ஃபீபாவின் முன்னாள் நிர்வாக உறுப்பினருமான டெல் நேரோ தெரிவித்துள்ளார்.

  2015 ஆம் ஆண்டில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது அமெரிக்க அமலாக்கத் தரப்பு விசாரணை மேற்கொண்டவர்களில் டெல் நேரோவும் ஒருவர்.

  பின்செல்