ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  வெங்கருடன் சண்டையிட்டதை எண்ணி வருந்துகிறேன்: மொரின்ஹோ

  வெங்கருடன் சண்டையிட்டதை எண்ணி வருந்துகிறேன்: மொரின்ஹோ

  30/04/2018

  img img

  மென்செஸ்டர், ஏப்.29: கடந்த சில ஆண்டுகளில் அர்செனல் நிர்வாகி, ஆர்சன் வெங்கருடன் கருத்து வேறுபாடு கொண்டதை எண்ணி தாம் வருந்துவதாக மென்செஸ்டர் யுனைடெட்  ஜோசே மொரின்ஹோ தெரிவித்துள்ளார்.

  இந்தப் பருவத்தின் இறுதியில் அர்செனல் நிர்வாகி பொறுப்பில் இருந்து ஆர்சன் வெங்கர் விலகவிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை கடைசி முறை, ஆர்சன் வெங்கர், ஓல்ட் டிரப்போர்ட் அரங்கில் அர்செனல் நிர்வாகியாக கால் பதிக்கவுள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மொரின்ஹோ, ஆர்சன் வெங்கருக்கு எதிராக தாம் உதிர்த்த வார்த்தைகளை நினைத்து வருந்துவதாக அவர் சொன்னார்.

  2004 ஆம் ஆண்டில் செல்சி நிர்வாகி பொறுப்பை ஏற்ற பின்னர், மொரின்ஹோ , வெங்கருடன் சிறந்த உறவைக் கொண்டிருந்ததில்லை,. குறிப்பாக வெங்கர் தோல்வி பெறுவதில் வல்லவர் என விமர்சித்திருந்தார்.

  எனினும் அந்த வார்த்தைகளை தாம் பேசியிருக்கக்கூடாது என மொரின்ஹோ தெரிவித்தார். 2004 ஆம் ஆண்டில் அர்செனல் பிரீமியர் லீக் வெற்றியாளராக வாகை சூடியபோது மிகச் சிறந்த அணியைக் கொண்டிருந்தது. அதற்கும் மேலாக தாங்கள் உழைப்பதற்கு அர்செனல் இதர அணிகளுக்கு ஓர் அளவு கோலை நிர்ணயித்திருந்தது என மொரின்ஹோ குறிப்பிட்டார்.

  மென்செஸ்டர் யுனைடெட்  ரசிகர்கள் வெங்கரை எப்போதும் ஏளனம் செய்துள்ளனர். எனினும் வரும் ஞாயிற்றுக்கிழமை மென்செஸ்டர் ரசிகர்கள் வெங்கருக்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் என மொரின்ஹோ கேட்டுக் கொண்டார்.

  பின்செல்