ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  கண்ணீருடன் விடைபெறுகிறார் இனியேஸ்தா

  கண்ணீருடன் விடைபெறுகிறார் இனியேஸ்தா

  30/04/2018

  img img

  பார்சிலோனா, ஏப்.29: பார்சிலோனாவின் மத்திய திடல் ஆட்டக்காரரும் அந்த அணியின் கேப்டனுமாகிய ஆன்ட்ரியஸ் இனியேஸ்தா, இந்த பருவத்தின் இறுதியில் அந்த கிளப்பில் இருந்து வெளியேறப் போவதாக அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த இனியேஸ்தா கண்ணீருடன் அந்த செய்தியை அறிவித்தார்.

  பார்சிலோனாவில் இன்னமும் தாம் பயன்படக்கூடிய ஓர் ஆட்டக்காரராக இருக்கும்போதே அந்த அணியில் இருந்தது விடைபெற நினைத்ததாக 33 வயதுடைய இனியேஸ்தா தெரிவித்தார்.  இனியேஸ்தா, சீனாவில் தமது கால்பந்து வாழ்க்கையைத் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  எனினும் பார்சிலோனாவுக்கு எதிராக தான் ஒருபோதும் விளையாடப் போவதில்லை என இனியேஸ்தா உறுதியாக தெரிவித்தார். 12 வயதில் பார்சிலோனாவின் லா மசியா கால்பந்து பயிற்சிக் கழகத்தில் இனியேஸ்தா தமது கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கினார். 

  பார்சிலோனா அணியுடன் நான்கு முறை ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணத்தை வென்றுள்ள இனியேஸ்தா, ஸ்பெயினுடன் உலகக் கிண்ணத்தையும் கைப்பற்றியுள்ளார். சனிக்கிழமை நடைபெறவுள்ள டெப்போர்த்திவோ லா கொருனாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு புள்ளியைப் பெற்றால் பார்சிலோனா இந்த பருவத்துக்கான ஸ்பெயின் லா லீகா பட்டத்தைக் கைப்பற்றும்.

  பின்செல்