ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்குள் நெய்மார் தயாராகி விடுவார்..

  உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்குள் நெய்மார் தயாராகி விடுவார்..

  30/04/2018

  img img

  ரியோ டி ஜெனிரோ, ஏப்.29: பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மார், உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்குள் தயாராகி விடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 3 ஆம் தேதி பிரேசிலின் பெலோ ஹொரிசோந்தே பகுதியில் அறுவைச் சிகிச்சை பெற்ற நெய்மார்,  மே 17 ஆம் தேதி வரை விளையாட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் பாரிஸ் செயின் ஜெர்மைன் அணியின் கடைசி லீக் ஆட்டம் மே 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த ஆட்டத்தில் நெய்மார் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  எனினும் ஜூன் மாதம் தொடங்கும் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு அவர் தயாராக இருப்பார் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி பிரெஞ்சு லீக் போட்டியில் நெய்மார் காயம் அடைந்தார். இதனால், நெய்மாருக்கு பிரேசிலில் அறுவை சிக்கிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  பின்செல்