ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஆஸ்ட்ரோ உலகம் வழங்கும் சித்திரா பௌர்ணமி நிலவரங்கள்!

  ஆஸ்ட்ரோ உலகம் வழங்கும் சித்திரா பௌர்ணமி நிலவரங்கள்!

  27/04/2018

  img img

  சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு மலேசியாவில் பேரா மாநிலத்தில் தெலுக் இந்தான், பகுதியிலுள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி திருக்கோவிலிலிருந்து 12 மணிநேர இடைவிடாத நிலவரங்களை ஆஸ்ட்ரோ உலகம் அதன் அதிகாரப்பூர்வ முகநூல், வலைத்தளம் வாயிலாகக் கொண்டு வரவுள்ளது. 

  இந்த இடைவிடாத நிலவரங்களின் போது, தெலுக் இந்தான் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவிலில் நடைபெறும் சித்திரா பௌர்ணமி கொண்டாட்டம், சிறப்பு பூஜைகள் குறித்த தகவல்களை அவ்வப்போது விழுதுகள் அறிவிப்பாளர் ரேவதி, ராகா வானொலி அறிவிப்பாளர் ரேவதி, நதியா ஜெயபாலன் ஆகியோர் தொகுத்து வழங்குவார்கள்.

  ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலுக்குத் திரளாக வந்து தரிசனம் செய்வது  தொன்று தொட்டு வரும் வழக்கமாகும். இத்தினத்தன்று பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துவதோடு, மதியம் மகேஸ்வர பூஜை எனப் பல விசேஷங்கள் இடம்பெறும். 

  அதுமட்டுமின்றி, இரவு வெள்ளிரத ஊர்வலம் குறித்த தகவல்களையும் ஆஸ்ட்ரோ உலகத்தின் முகநூல், வலைத்தளம் வாயிலாகப் பெற்றுக் கொள்ளலாம். 

  ஆகவே, மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் இவ்வருடத்தின் சித்திரா பௌர்ணமி நேரடி நிலவரங்களை நாளை ஏப்ரல் 29ஆம் தேதி காலை 8.00 முதல் இரவு 8.00 வரை ஆஸ்ட்ரோ உலகத்தின் முகநூல் மற்றும் வலைத்தளத்தில் இணைய மறாவதீர்கள். 

  அதே வேளையில், சித்திரா பௌர்ணமி கொண்டாட்டத்தைக் குறித்த புகைப்படங்களை ஆஸ்ட்ரோ உலகத்தின் இன்ஸ்டாகிராம் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம். 

  மேல் விவரங்களுக்கு www.astroulagam.com.my <http://www.astroulagam.com.my/> அகப்பக்கத்தை வலம் வாருங்கள். 

   

  பின்செல்