ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  16 வயதுக்கு உட்பட்ட ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ணம்: ஏ பிரிவில் மலேசியா

  16 வயதுக்கு உட்பட்ட ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ணம்: ஏ பிரிவில் மலேசியா

  27/04/2018

  img img

  கோலாலம்பூர், ஏப்.28: 16 வயதுக்கு உட்பட்ட ஆசிய கால்பந்து சம்மேளனக் கிண்ணப் போட்டியில் மலேசிய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் இரண்டு முறை வெற்றியாளரான ஜப்பான், தாய்லாந்து, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. 

  வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 10 ஆம் தேதி வரை போட்டி மலேசியாவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான ஈராக், டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் தென் கொரியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன.  

  பி பிரிவில் வட கொரியா, ஓமான், யேமன், ஜோர்டான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள வேளையில், சி பிரிவில் ஈரான், வியட்நாம்., இந்தியா, இந்தோனேசியா ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், எஸ். பாலசந்திரன் பயிற்சியின் கீழ் விளையாடிய மலேசியா, காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. 

  அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் மலேசியா, 17 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் கலந்து கொண்டிருக்கும். இந்தப் போட்டியின் மூலம் அரையிறுதி ஆட்டம் வரை தகுதிப் பெறும் நான்கு நாடுகள், பெருவில் நடைபெறவுள்ள 17 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு நேரடியாக தகுதிப் பெறும்.

   

  பின்செல்