ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  கிழக்கு கடற்கரையில் குதூகலத்துடன் விளம்பி புத்தாண்டு திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

  கிழக்கு கடற்கரையில் குதூகலத்துடன் விளம்பி புத்தாண்டு திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

  25/04/2018

  img img

  ஜாலான் புக்கிட் உபியிலுள்ள 107 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஶ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் சித்திரை 'விளம்பி' புத்தாண்டு குதூகலத்துடன் கொண்டாடப்பட்டது.

  இவ்வட்டார இந்துமக்கள் அதிகாலையிலேயே இவ்வாலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டு புதிய ஆண்டு எல்லா வளங்களையும் உடல் ஆரோக்கியத்தையும் தர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.

  அன்றைய தினம் ஆலயத்தின் தலைமை குருக்கள் பிரம்மஶ்ரீ சிவராமலிங்க குருக்கள் சிறப்புப் பூஜைகளையும், வழிபாடுகளையும் நடத்தினார். விநாயகப் பெருமானுக்கு அலங்கார பூஜையுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆலய குருக்கள் புதிய வருட பஞ்சாங்கத்தை பக்தர்கள் முன் வாசித்து அதன் நன்மைகளையும் இதர விளக்கங்களையும் அளித்தனர். நட்சத்திரங்கள், ராசிகள் வாரியாகவும் பலன்கள் வாசிக்கப்பட்டன.

  காலை உபயத்தை ராஜசேகரன், சாந்தி குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டனர். மாலை உபயத்தை திரு.திருமதி காளிமுத்து உமா குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டனர்.

  ஆலயத் தலைவர் அவரது சிறிய உரையில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பக்தர்களுக்காக பிரத்தியேக சமய வகுப்புகள் நடைபெறுவதையும் எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஆங்கிலம், அறிவியல் பாடங்களுக்காக வகுப்புகளும் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

  ஆர்வமுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, இலவசமாக நடைபெறுகின்ற இந்த வகுப்புகளில் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  பின்செல்