ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  குடும்பத்தோடு ஓய்வு நேரத்தை செலவிட ஆஸ்ட்ரோவில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள்...

  குடும்பத்தோடு ஓய்வு நேரத்தை செலவிட ஆஸ்ட்ரோவில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள்...

  25/04/2018

  img img

  சரி படம் பார்க்கலாமா ?

  ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கையில் பல குறிக்கோள்களை நோக்கியே பயணிக்கும் நமது செயல்கள் நமது  மகிழ்ச்சியையும் குடும்பத்திற்கான நேரத்தையும் குறைத்துக் கொண்டே வருகின்றன. வாழ்க்கை லட்சியத்திற்காக குடும்பத்தையோ, குடும்பத்துக்காக லட்சியத்தையோ விட்டுக்கொடுக்கவும் முடியாமல், பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் தெரியாமல் மனதைக் குழப்பிக் கொள்பவர்களே இன்று அதிகம். இந்த ரீதியில் பார்த்தால், மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இன்று இல்லை. 

  அந்த வகையில் உங்களை மகிழ்விக்கவும், மனதை அமைதிப்படுத்தவும் நீங்கள் உங்கள் குடும்பத்தோடு பார்த்து மகிழ நாள் தோறும் பல சுவாரசியமான திரைப்படங்களை ஒளிபரப்புகிறது ஆஸ்ட்ரோ விண்மீன் HD (அலைவரிசை 231).

  திங்கள் (23.04.2018) -  சிட்டிசன்       

  செவ்வாய் (24.04.2018)-  நல்லவனுக்கு நல்லவன்     

  புதன் (25.04.2018) -  உரு  

  வியாழன் (26.04.2018) -  முப்பரிமாணம்   

  வெள்ளி (27.04.2018) -  தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்    

  சனி (28.04.2018)-  குற்றம் 23

  ஞாயிறு (29.04.2018) -  24  

   

  பல கோணங்களில் பயணிக்கும்  இத்திரைப்படங்களை ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் HD-யில் (அலைவரிசை 231) கண்டு மகிழுங்கள்.  

   

   

  2)

  ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட திரைப்படங்கள்

   

  தொழில், கல்வி, லட்சியம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் நமது வாழ்க்கையில் குடும்பத்திற்கான நேரம் குறைந்து கொண்டே வருகிறது. அதனை சரி செய்யும் வகையில், குடும்பத்தோடு பார்த்து மகிழ நாள் தோறும் பல சுவாரசியமான திரைப்படங்களை ஒளிபரப்புகிறது ஆஸ்ட்ரோ ராஜ் தொலைக்காட்சி (அலைவரிசை  222).  

  அந்த வகையில் இவ்வாரம் நடிகர் சத்தியராஜ், பாண்டியராஜன், சிவக்குமார், மாதவன் என பல நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த பல்வேறு திரைப்படங்களை ஒளிபரப்புகிறது ஆஸ்ட்ரோ ராஜ் தொலைக்காட்சி.

   

  தேதிமதியம் 01:30 மணிக்குஇரவு 10 மணிக்கு

  செவ்வாய் (24.04.2018)தாய்நாடுஆனந்தராகம்

  புதன் (25.04.2018) விடிஞ்சா கல்யாணம்சுப்ரமணியசுவாமி

  வியாழன் (26.04.2018) தாய் மாமன்நான் அடிமை இல்லை

  வெள்ளி (27.04.2018) வணக்கம் தலைவாபாரத ரத்னா

  சனி (28.04.2018)கும்மாளம்ரிலாக்ஸ்

  ஞாயிறு (29.04.2018)தொடாமலேஅசோகா

   

  ராஜ் தொலைக்காட்சியில் (அலைவரிசை  222) ஒளியேறும் இத்திரைப்படங்களை குடும்பத்தோடு  கண்டு மகிழுங்கள்.  

   

   

  3) 

  ஆஸ்ட்ரோவின் “விழுதுகள்” நிகழ்ச்சி

  வார நாட்களில் காலையில் சந்திப்புகள், தகவல்கள் என இன்றைய நிலையில் மக்களுக்கு கருத்தாக்கத்துடன் கூடிய பயனுள்ள நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும், நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்ற நோக்கில் சுவையான நிகழ்ச்சிகளின் கலவையாக ஒளியேறும் நிகழ்ச்சிதான் ‘விழுதுகள்’. 

  கடந்த பத்தாண்டுகளாகத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் மட்டும் ஒளியேறிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி முதல் www.astroulagam.com.my எனும் அகப்பக்கத்திலும் இடம்பெறவுள்ளது.  

  இந்த அகப்பக்கத்தின் வாயிலாக, இனி எந்த நேரத்திலும் எங்கிருந்தாலும்  இணையத்தின் வழியாக மலேசியா வாழ் மக்கள் மட்டுமல்லாது, உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் நமது ‘விழுதுகள்’ நிகழ்ச்சியைக் கண்டு பயனுறலாம்.

   

  4)

  தினம் ஒரு சமையல் 

  இல்லத்தரசிகளானாலும் சரி, வேலைக்கு செல்லும் பெண்களாக  இருந்தாலும் சரி, காலையில் கண்  விழித்த உடனேயே, குடும்பத்தினர்  சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வதற்கும் என்ன சமையல் செய்வது’ என்ற பரபரப்பு  ஆரம்பமாகிவிடுகிறது. இது பெண்களுக்கு ஒரு போராட்டமாகவே ஆகிவிட்டது. இதனை சரி செய்யும் வகையில்  உங்களுக்காகவே ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) நாள் தோறும் பல சமையல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.   

  சமையல் நிகழ்ச்சிகள்

  திங்கள் - ஸ்திர் பிராய் 

  செவ்வாய் - ஸ்டுடியோ கிட்சன்

  புதன் - லஞ்ச் போக்ஸ்

  வியாழன் - நம்ம வீட்டு செஃப்

  வெள்ளி -  தட்டு கடை 

   

  நாள்தோறும் பல சுவையான, வித்தியாசமான சமையல்களை செய்து உங்கள் குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்த திங்கள் முதல் வெள்ளி வரை முற்பகல் 11:00 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில்லுடன் இணைய மறவாதீர்கள்.  

   

  5)

  இவ்வாரம் வெள்ளித்திரையில் என்ன ஸ்பெஷல் 

  வாரம் முழுக்க இடைவிடாமல் வேலை செய்யும் பல பேர், வார இறுதி நாட்களை வீட்டிலேயே செலவழிக்க விரும்புவார்கள். அதுவும் விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு திரைப்படம் பார்ப்பதென்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் ஆஸ்ட்ரோ வெள்ளித்திரையில் (202) ஒளியேறும் சிறப்புத் திரைப்படங்களை குடும்பத்தோடு  கண்டு மகிழுங்கள். 

  வெள்ளி (27.04.2018) :  “ஜித்தன் 2” 

  சனி (28.04.2018) : “இவன் தந்திரன்” 

  ஞாயிறு (29.04.2018) : “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்”       

  காதல், காமெடி கலாட்டா,  பாசம், மாஸ் என பல  அம்சங்களைக் கொண்டு பயணிக்கும் இத்திரைப்படங்களை ஆஸ்ட்ரோ வெள்ளித்திரையில் இரவு 09 மணிக்கு கண்டு மகிழுங்கள். 

   

  6)

  ஏப்ரல் திரைப்படங்கள் 

  ஓய்வு நேரங்களில் நமது மனதை மகிழ்விக்கும் காரியங்களில் நாம் ஈடுபட விரும்புவது இயல்புதான். விளையாட்டு, சுற்றுலா, நண்பர்களுடன் நேரம் செலவழித்தல் போன்ற எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும், தொலைக்காட்சி பார்ப்பது என்பதும் அனைவருக்கும் பிடித்த ஒன்று. 

  அதனை புரிந்து கொண்டு ஏப்ரல் மாதம் முழுவதும் தனது ரசிகர்கள் இருக்கையில் அமர்ந்து வீட்டை விட்டு வெளியே நகரவிடாமல் செய்வதற்காக பல இந்தித் திரைப்படங்களை ஆஸ்ட்ரோ போலிஓன் HD (அலைவரிசை 251)  ஒளிபரப்புகின்றது. 

  1. 05.04.2018 தொடங்கி :- ‘சுப மங்கல் சாவ்தன்’ 

  பிரசன்னா, லோகா வாஷிங்டன் நடிப்பில் தமிழில் வெளியான “கல்யாண சமையல் சாதம்” திரைப்படத்தின் இந்தி ரீ-மேக் தான் “சுப மங்கல் சாவ்தன்” திரைப்படம். இந்தியில் ஆயுஸ்மான் குரனா , புமி பத்னேகர் நடித்துள்ளனர்.  காதலுக்கும் / காதலர்களுக்கும்   இடையில் நடக்கும் ஒரு வித்தியாசமான பிரச்சினையை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் திரைப்படம். 

  2. 12.04.2018 தொடங்கி :- ‘பூமி’   

  சஞ்சய் தத், நடிகை அதிதி ராவ் நடித்து அவ்வப்போது இளம் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கேங்ரேப் எனப்படும் பாலியல் தொடர்பான குற்றங்களையும்,  குற்றவாளிகளையும் பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்யும் ஒரு தந்தையின் கதையை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் திரைப்படம். 

  3. 19.04.2018, இரவு 09 மணிக்கு :- ‘டெரா இன்டெஸார்'   

  கவர்ச்சிப் புயல் சன்னி லியோன் கதாநாயகியாக நடித்து, நடிகர் அர்பாஸ் கான் நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் மியூசிக்கல் ரொமான்டிக் த்ரில்லர்  திரைப்படம். 

  4. 26.04.2018, இரவு 09 மணிக்கு :- ‘டெரா இன்டெஸார்' 

  திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டு விவாகரத்துக்கு பிறகு தன் பெற்றோர்களுடன் வாழ்ந்து வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கையையும், அவள் வாழ்க்கையை சூதாட்டம் எப்படி திருப்பிப் போடுகிறது என்ற கதையையும் மையப்படுத்தி வெளிவந்திருக்கும் ஒரு திரைப்படம்.         

   

  உங்கள் நாட்களை  உங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக  செலவழிக்க ஆஸ்ட்ரோ போலிஓன் HD (அலைவரிசை 251)-இல் ஒளியேறும் சிறப்பு இந்தி நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள். 

   

  7) 

   “அறிந்ததும் அறியாததும்”

  ஆன்மிகம், ஆரோக்கியம், பொது அறிவு, சிந்தனை துளிகள் என பயனுள்ள தகவல் நிகழ்ச்சியாக மலர்கிறது சன் தொலைக்காட்சியில் ஒளியேறி வரும் ‘சூரிய வணக்கம்’.  

  இணையம் வழி பொருட்கள் வாங்குவதில் இருக்கும் சிக்கல்கள், சரித்திரம் படிப்பதால் என்ன பயன், சமூக வலைத்தளங்களால் ஏற்படும் விளைவுகள் போன்ற பயனான தலைப்புகளை ‘வாங்க பேசலாம்’ அங்கத்தில் பட்டிமன்ற புகழ் ராஜாவும் பாரதி பாஸ்கரும் மிக அழகாக அலசி ஆராய்கிறார்கள்.  

  திரைப்பட நடிகர் பாஸ்கி, ‘சொல்லுங்க பாஸ்’ எனும் அங்கத்தில், நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை நகைச்சுவை சமாச்சாரங்களோடு சேர்த்து சுவாரசியமாக பரிமாறுகிறார். ‘உலகம் இவ்வளவுதான்’ அங்கத்தில் வாழைப்பழம் முதல் வங்காளதேசம் வரையிலான பல அரிய தகவல்களை சொல்கிறார் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. 

  கூந்தல் பராமரிப்பு, சுக்கின் மருத்துவ குணங்கள், கடுக்காய் பயன்கள் போன்ற ஆரோக்கிய குறிப்புகளோடு மலர்கிறது ‘நாட்டு மருத்துவம்’ அங்கம். இதோடு, பாடம் சொல்லும் ஆன்மீக கதைகளும் ‘சூரிய வணக்கம்’ நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது. இந்நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சியில் (அலைவரிசை 211) திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7:30 மணிக்கு பார்த்து பயன் பெறலாம்.

   

  8) 

  ஆஸ்ட்ரோ ‘தாரா எச்.டியில் புதிய தொடர்

  பாலிவுட் ரசிகர்களுக்காகவே புத்தம் புதிய திரைப்படங்கள், விவாத நிகழ்ச்சிகள், அனைத்துலக நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள், விருது விழாக்கள், ஆவணப்படங்கள் என  பல வித்தியாசமான நிகழ்ச்சிகளைக்  கொண்டு வருகிறது ஆஸ்ட்ரோ தாரா எச்.டி  (அலைவரிசை 108)  .

  சீரியல்கள் வரிசையில் குடும்பம், பேய், பழிவாங்கும் பாம்பு என பல சுவாரசியமான இந்தி சீரியல்களை ஒளிபரப்பி வரும் ஆஸ்ட்ரோ தாரா எச்.டி இன்று தொடங்கி “பாகி” எனும் புத்தம் புதிய தொடரை ஒளிபரப்புகிறது. 

  ஓர் எளிய கிராமத்து பெண்ணின் போராட்டம், திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் பின்னர் தன் லட்சியத்தை அடைய அவள் படும் கஷ்டங்கள், சமூகம் அந்தப் பெண்ணை எப்படிப் பார்க்கிறது, பெண்களுக்குத் தடையாக இருக்கும் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிச் செல்லும் இத்தொடரை சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.00 மணிக்கு கண்டு மகிழுங்கள்.

   

  9) 

  அப்பாவின் லட்சியத்தை நிறைவேற்றும் மகன்

  விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன், மீனாட்சி, சமுத்திரக்கனி, பாலசரவணன், வேல.ராமமூர்த்தி, மைம் கோபி, மாரிமுத்து, தேனப்பன் எனப் பலர் நடித்து சாதிப்பெருமை பேசுபவர்களை விமர்சித்து வந்திருக்கும் படம் தான் 'மதுரவீரன்'. 

  சாதியின் பெயரால் பிரிவினையைத் தூண்டுவதை ஒழித்தால்தான் மக்கள் ஒற்றுமையாக இருக்க முடியும் என்ற நோக்கத்தோடு ஊருக்கு பல நல்ல விஷயங்களைச் செய்து வரும் மனிதர், சமுத்திரக்கனி. சாதிகளால் பிளவுபட்டுக் கிடக்கும் ஊர்களை ஜல்லிக்கட்டால் இணைக்க முடியும் என நம்பி, தீவிர முயற்சியால், ஜல்லிக்கட்டையும் நடத்துகிறார் நமது சமுத்திரக்கனி.  

  ஆனால், நினைத்ததற்கு மாறாகப் பகை மேலும் வளர, சமுத்திரக்கனி உள்படப் பலரும் இதில் பலியாகிறார்கள். பின்னர் அந்த ஊரில் இருக்க மனமில்லாமல் அவரது சிறுவயது மகனான சண்முகபாண்டியனை அழைத்துக் கொண்டு மலேசியாவுக்கு சென்றுவிடுகிறார் சமுத்திரக்கனியின் மனைவி. இருபது ஆண்டுகளுக்குப்பின் ஊருக்கு வரும் அவரின் மகன் சண்முகபாண்டியன், அப்பாவின் லட்சியத்தை நிறைவேற்றவும், அவரைக் கொன்றவர்களை அடையாளம் காணவும் துடிக்கிறார். அவரின் நோக்கம் நிறைவேறியதா ? இல்லையா என்பதனை அறிய ஆஸ்ட்ரோ  தங்கத்திரையுடன்  (அலைவரிசை241) இணைந்திருங்கள்.

   

  பின்செல்