ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  கட்சி தொடங்குவது உறுதி! ரஜினிகாந்த்

  கட்சி தொடங்குவது உறுதி! ரஜினிகாந்த்

  25/04/2018

  img img

  சென்னை, ஏப் 25: அரசியல் கட்சி தொடங்குவது உறுதி, கட்சி தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். உடல் பரிசோதனைக்காக நேற்று முன்தினம் இரவு அமெரிக்கா புறப்படும் ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது : 

  அரசியல் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் எப்போது தொடங்குவேன் என்று உறுதியாக சொல்ல முடியாது. அரசியல் கட்சி தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

  செய்தியாளர்கள் குறித்து பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்து மன்னிக்க முடியாதது. தெரிந்து தெரியாமல் செய்தாலும் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். சீருடையில் இருக்கும் காவலரை தாக்குவது கண்டிக்கத்தப்பது. காவல்துறையினர் மீது கை வைப்பது என்பது மன்னிக்க முடியாதது. நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்குப் பின் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நண்பர் என்ற முறையில் துக்ளக் செய்தியாசிரியரும் பிரபல ஆடிட்டருமான குருமூர்த்தியை சந்தித்ததாக ரஜினி தெரிவித்துள்ளார்.

  பின்செல்