ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  இணைந்து பணியாற்றுவதில் கேவியஸ் ஈடு இணையற்றவர்!

  இணைந்து பணியாற்றுவதில் கேவியஸ் ஈடு இணையற்றவர்!

  24/04/2018

  img img

  தானாராத்தா, ஏப். 25: 'கேமரன்மலையை மீண்டும் வளமாக்குவோம்' என்ற மாபெரும் திட்டத்தை அறிமுகப்படுத்திய மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ கேவியஸ் அவர்களுடன் கேமரன்மலை மக்களும் இணைந்து பணியாற்றியதனால், பல்வேறு விவகாரங்களுக்கு விடை காணப்பட்டுள்ளது என்பது ஒட்டுமொத்த கேமரன்மலை மக்களின் ஒருமித்த கருத்தாக அமைகிறது.

  கேமரன்மலை மண்ணின் மைந்தரான டான்ஶ்ரீ கேவியஸ் அவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொண்ட மக்கள் நல சேவைகளால் மகிழ்ச்சியடைந்ததோடு நம்பிக்கையை ஏற்படுத்திய விடிவெள்ளியாகவே கருதப்பட்டார்.

  இன்று சிலர் அவரின் சேவைகளை உதாசினப்படுத்தலாம். ஆனால், மக்களிடையே ஏற்பட்டுள்ள மனமாற்றமும் அரசியலில் நிலவும் எதிர்ப்பார்ப்பும் எக்காலத்திலும் அழிக்க முடியாத ஒன்றாகவே சித்தரிக்கப்படுகிறது.

  மக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினைகளைக் களைந்து அவர்களுடனே பயணிக்கும் ஆற்றல் கொண்ட டான்ஶ்ரீ கேவியஸ், எல்லையற்ற பயணம் எவ்வளவு முக்கியம் என்பதை அறிமுகப்படுத்தி சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து நிலையிலானவர்களின் சிந்தனை ஆற்றலை விரிவுப்படுத்தினார் என்றால் அது மிகையாது.

  கேமரன்மலையில் டான்ஶ்ரீ கேவியஸ் ஆற்றிவந்த சேவைகள் பல்வேறு பிரிவுகளை உட்படுத்தியவை. கல்வி, பொருளாதாரம், சமூகம் ஆகிய மூன்று முக்கியமான கூறுகளின் கீழ் இதுவரை 640க்கும் மேற்பட்ட நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

  ஒரு சமூகமோ, நாடோ வளர்ச்சி காண வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட பிரிவை மட்டுமே சார்ந்திருக்கக்கூடாது. அப்படி அது செயல்வடிவத்திற்கு கொண்டு வரப்படுமேயானால், அஃது ஒருபோதும் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லாது. இதனைக் கருத்தில் கொண்டவராய் கேமரன்மலையில் விவேகமாகத் திட்டமிட்டு அனைவரையும் அரவணைத்த மக்கள் பிரதிநிதியாக டான்ஶ்ரீ கேவியஸ் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

  ஒவ்வொரு முறையும் கேமரன்மலையில் நடைபெறும் சந்திப்புகள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் இப்படி எதுவாக இருப்பினும், பொதுமக்களை சந்தித்து அவர்களுடன் அளவளாவும் வகையில் நடைப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் டான்ஶ்ரீ கேவியஸ். இதுபோன்ற நடவடிக்கைகளின் வாயிலாகத்தான் மக்களுடனான நெருக்கத்தை ஏற்படுத்த முடிவதோடு, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கண்டறிய முடியும். இதனை மிகத் திறமையாகக் கையாண்டு வருபவர் டான்ஶ்ரீ கேவியஸ் மட்டுமே.

  கேமரன்மலையிலுள்ள மக்களிடையே மைபிபிபி ஆற்றி வந்த சேவைகள் யாவும், அதன் தேசியத் தலைவரின் சிந்தனையில் உதித்தவையாகும். 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களை வழிநடத்தி வரும் டான்ஶ்ரீ கேவியஸ் கேமரன்மலைக்கு சிறந்த தேர்வாக அமைவார். அவர் என்றுமே கேமரன்மலை மக்களுக்கு சேவையாற்றுவார் என பலமுறை வாக்குறுதி வழங்கியிருக்கிறார்.

  சில வேளைகளில் எழுத்தில் உண்மை இருக்காது எனப் பலரும் கருதலாம். ஆனால், படங்கள் ஒருபோதும் பொய் சொல்லாது. அந்த வகையில் டான்ஶ்ரீ கேவியஸ் அவர்களின் சேவைகளை இங்குள்ள படங்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

  பின்செல்