ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மீண்டும் பாகான் டத்துக்கில் களமிறங்குகிறார் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி

  மீண்டும் பாகான் டத்துக்கில் களமிறங்குகிறார் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி

  24/04/2018

  img img

  ஈப்போ, ஏப்.25:

  14ஆவது பொதுத் தேர்தலில் பாகான் டத்துக் நாடாளுமன்றத்தில் மீண்டும் போட்டியிடுகிறார் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி.

  இந்தத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான், பாஸ், சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடவிருப்பதால், 4 முனை போட்டி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  1995ஆம் ஆண்டு முதல் பாகான் டத்துக்கில் போட்டியிட்டு வரும் அகமட் ஸாஹிட் ஹமிடி, தற்போது ஆறாவது முறையாக அந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

  இவரின் தலைமையில் பாகான் டத்துகில் பல உருமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. பாகான் டத்துக் பேராவின் 12ஆவது மாவட்டமாக அறிவிக்கப்பட்டதும் இதில் அடங்கும்.

  13ஆவது பொதுத் தேர்தலில் பிகேஆரின் மதி ஹசானை 2,108 பெரும்பான்மை வாக்குகளில் அவர் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி, ராஜா போமோ எனப்படும் டத்தோ இப்ராஹிம் மாட் ஸிம் அத்தொகுதியில் போட்டியிட விருப்பதாகக் கூறினார். பாஸ் கட்சியை பிரதிநிதித்து அதா அப்துல் முனேம் ஹசான் அடில், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஒருவரும் இங்கு போட்டியிடவிருக்கின்றனர்.

   

  பின்செல்