ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மலேசிய சுகாதார சேவைக்கு அனைத்துலக நிலையில் அங்கீகாரம்

  மலேசிய சுகாதார சேவைக்கு அனைத்துலக நிலையில் அங்கீகாரம்

  24/04/2018

  img img

  புத்ராஜெயா, ஏப். 25: சிறந்த சுகாதார சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற அரசின் இலக்கு வெறும் வெற்று வார்த்தைகள் அல்ல. இலக்கை செயல்படுத்தி இப்போது உலகத்தர அங்கீகாரத்தையும் பெற்றிருப்பது அரசாங்கம் மக்களின் சுகாதார நலனில் கொண்டுள்ள ஈடுபாட்டை உறுதிப்படுத்தியிருப்பதாக பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

  'அனைத்துலக சுகாதார சுற்றுப்பயண' சஞ்சிகை அறிக்கையின்படி தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு அதாவது 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சுகாதாரம், மருந்தியல் சுற்றுப்பயண இடமாக மலேசியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதோடு, அனைத்துலக வாழ்வியல் (International Living) சஞ்சிகை, உலகளாவிய சுகாதார பராமரிப்புத் துறையில் முதன்மையான 5 நாடுகளில் ஒன்றாக மலேசியாவை அங்கீகரித்துள்ளது.

  அரசாங்கம் முன்மொழிந்த உறுதிமொழிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருப்பதை இந்த அங்கீகாரங்கள் நிரூபித்துள்ளன. 14ஆவது பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கையின் வழி அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேசிய முன்னணியின் தலைமைத்துவத்தில் சுகாதாரம், வாழ்க்கை முறை கூறுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதையும் டத்தோஶ்ரீ நஜிப் சுட்டிக்காட்டினார்.

  தேசிய புற்றுநோய் கழகத்தின் திறப்புவிழாவில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு பேசினார். தேமுவின் ஆட்சியில் நாட்டின் சுகாதார துறை மேம்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி கூறினார். பட்ஜெட் 2018இல் 27 பில்லியன் வெள்ளியும், 26 பில்லியனும் சுகாதார அமைச்சிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.  

   

   

  பின்செல்