ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  கேமரன்மலை மக்களின் இறுதி முடிவு!

  கேமரன்மலை மக்களின் இறுதி முடிவு!

  24/04/2018

  img img

  கோலாலம்பூர், ஏப்.24: கேமரன்மலை மக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக விவேகத் திட்டங்களையும் அளப்பரிய சேவைகளையும்  பிரிவினையின்றி வழங்கி வரும் மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் அவர்களே கேமரன்மலை நாடாளுமன்றத்தின் வேட்பாளராக களத்தில் இறக்கப்பட்டு அவருக்கு வற்றாத பேராதரவை வழங்கி எங்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று கேமரன்மலை மக்கள் இறுதி முடிவு எடுத்துள்ளனர் என்ற உண்மையை இதன்வழி தெரியப்படுத்த வேண்டியது தாய்மொழி நாளிதழின் கடமையாகும்.

  "கேமரன்மலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக எங்களுக்குத் துணையாக இருந்தவர் டான்ஶ்ரீ கேவியஸ். அவர்தாம் எங்களின் பிரிதிநிதியாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும். அதற்கு வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் அவருக்கே முழுமையான ஆதரவை வழங்க நாங்கள் காத்திருக்கிறோம். இதுவே எங்களின் இறுதி முடிவும்கூட" என நேற்று மாலை வரை தாய்மொழி நாளிதழ் அலுவலகத்துக்கு இடைவிடாத தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

  தாய்மொழி நாளிதழின் வழி, டான்ஶ்ரீ கேவியசின் சேவைகளை படம்பிடித்துக் காண்பித்து வந்துள்ளீர்கள். அவற்றைப் பார்த்துத்தான், இங்குள்ள மக்களின் விடிவெள்ளியாய் கேவியஸ் வந்திருக்கிறார் என்று மகிழ்ச்சியாக இருந்தோம். எதையும் நேர்மறையாகப் பார்க்கும் தலைமைத்துவ ஆற்றலை அவரிடம் காண முடிகிறது என இங்குள்ள அனுபவமிக்க கல்விமான்கள் எங்களிடம் கூறிவந்தனர். அதோடு, அவர்களே இங்குள்ள மக்களின் தேர்வாக இருக்கிறார் என்றும் எங்களிடம் கருத்துத் தெரிவித்தனர்.

  கேமரன்மலையைப் பொறுத்தவரை, ஓராங் அஸ்லி மக்களுக்கு யாரும் கொடுக்காத ஓர் உயரிய அங்கீகாரத்தை வழங்கிய பெருமைக்குச் சொந்தக்காரர் அவர். இங்குள்ள இதர இன மக்கள் பூர்வக்குடி மக்களை ஓராங் அஸ்லி என்றே அழைத்து வந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்த வார்த்தை மாறி, ஓராங் அசால் ஆனது. இதனை சாத்தியமாக்கியவர் கேவியஸ்.

  இந்த நாட்டில் மற்ற இனங்களுக்கு ஈடாக அவர்களை அரவணைக்க வேண்டும் என பல உயர்மட்ட தலைவர்கள் மேடைப் பேச்சுக்காக சொல்வார்கள். ஆனால், டான்ஶ்ரீ கேவியஸ் அதனை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று நினைத்து பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார். தற்போது இங்குள்ள ஓராங் அசால் மக்களை அரவணைக்கும் ஆற்றல்மிக்க தலைவராக அவர்களின் மனங்களில் பதிந்ததோடு, அவரைத்தான் தங்களின் காப்பாளராக ஏற்றுக் கொண்ட விவகாரமும் பரவலாகவே மற்ற இனத்தவர்களாலும் பேசப்பட்ட ஒன்றாகும்.

  மஇகாவினர் பழனிவேலை தம் கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்ததோடு, எங்களைக் கேட்பாரற்றுக் கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதும் ஒரு கருத்து சரித்திரமாகும். இதனை நன்கு உணர்ந்த டான்ஶ்ரீ கேவியஸ், உடனே பிரதமர் ஆசியுடன் கேமரன்மலைக்கு வந்தார். அவர், எங்களுக்காகத்தான் வந்திருக்கிறார் என்ற தகவல் அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்தது. குறிப்பாக, இங்குள்ள சிலரின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அந்த அளவிற்கு டான்ஶ்ரீ கேவியசின் பங்களிப்பு மக்களின்பால் பன்மடங்கு பரந்து விரிந்து கிடந்தது.

  நான் செய்ய வேண்டியவற்றை எமது மக்களுக்காகத் தொடர்ந்து செய்வேன் என்று இன்னமும் பத்திரிகையில் படிக்கும்போது, எங்களின் முடிவில் தவறில்லை என்று தெரிகிறது. அரசியலில் எதுவும் நடக்கலாம். அது அனைவருக்கும் நன்மையளிக்கக்கூடியதாக அமைதல் சிறப்பு. அந்த வகையில் கேமரன்மலை மக்களின் தேர்வாக கேவியஸ் அவர்களைத் தேர்தெடுக்கும் எங்களின் இறுதி முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்ற தோரணையிலேயே அலுவலகத்திற்கு வந்த தொலைபேசிகள் எடுத்துரைக்கின்றன.

  ஒரு தொகுதியில் போட்டியிட எண்ணம் கொண்டிருப்பவர் முதலில் செய்ய வேண்டியதை மிகச் சரியாகச் செய்தவர் டான்ஶ்ரீ கேவியஸ். மக்களுடனான நெருக்கத்தை அதிகரிப்பதில் முக்கியத்துவம் கொடுக்கும் எண்ணம் எல்லாருக்கும் தோன்றாது. அரசியல் பண்பட்ட சிந்தனையுடன் வலம் வரும் கேவியஸ் போன்றவர்களுக்கு அச்சிந்தனை வெளிப்படும். மக்களுக்கு இரண்டாவது இடம் கொடுத்து, மானியங்களுக்கு முதலிடம் கொடுக்கும் கீழ்த்தரமான அரசியல்வாதிகளால் பொதுமக்களுடன் இணைவது பகல் கனவே.

  இந்த நாட்டின் தேசிய அரசியல் நீரோட்டத்தில் மிகப் பெரிய இரு தலைவர்களான பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் அவர்களும் அவருக்கு அடுத்து இரண்டாம் நிலையில் துணைப் பிரதமர் பதவி வகிக்கும் டத்தோ டாக்டர் ஸாஹிட் ஹமிடி அவர்களும் என்ன சொன்னார்களோ அதை வைத்துத்தான் நாங்கள் டான்ஶ்ரீ கேவியஸ் அவர்களை மனத்தில் நிலைநிறுத்தி வைத்திருக்கிறோம்.

  வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் மக்களின் மனங்கவர்ந்த (likeable), வெற்றிபெறக்கூடியவர்களுக்கு (Winnable) முன்னுரிமை வழங்கப்படும். பாரம்பரிய தொகுதி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பனவற்றை அறிமுகப்படுத்தியவர்களே இவர்கள்தாம். அவர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப கேமரன்மலை மக்களுடன் நெருக்கமாகவும் மனங்கவர்ந்தவராகவும் வெற்றியை நிலைநாட்டக்கூடியவராகவும் திகழ்பவர் டான்ஶ்ரீ கேவியஸ் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

  வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன்மலை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களின் இறுதி முடிவு என்ன என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் இந்தப் பதிவு அமைகின்றது. தாய்மொழி நாளிதழ் அலுவலகத்துக்கு வந்த தொலைபேசி அழைப்புகளும் சமூக வலைத்தள பதிவேற்றங்களும் கேமரன்மலை மக்களின் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. டான்ஶ்ரீ கேவியஸ்தாம் கேமரன்மலையின் சிறந்த தேர்வு! இதுவே அவர்களின் இறுதி முடிவு!! இதில் தேவை உறுதியான தெளிவு!!!

  கேமரன்மலை மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்த ஒருவராக டான்ஶ்ரீ கேவியஸ் வலம் வருகிறார். இங்குள்ள மக்களின் நல்வாழ்வை மட்டுமே மையமாகக் கொண்டு இன, மத, மொழி பேதமையற்ற சேவைகளே இவரை 'அங்கிள் போன்ட்' என்று செல்லமாக அனைவராலும் அழைக்கப்படுவதற்கு வழிவகுத்தது. இவரின் அயராத உழைப்பையும் கேமரன்மலையில் முன்னெடுத்த உருமாற்றத் திட்டங்களையும் குறித்து இங்குள்ள மக்களும் ஆதரவாளர்களும் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ள கருத்துகளும் இங்குத் தொகுத்து வழங்க்கடுகிறது.

   

  "

  1)

  Ishanjag Shanmugam " Caring leadership from YBhg Tan Sri M. Kayveas in spending Quality time in ensuring our future generation are taken care from their initial education from the school itself. Warga Cameroon are gifted to have a charismatic leader to initiate to make CAMERON nice again."

  2)

  Kelvin Jeyakanth "I support Tan Sri Kayveas for Cameron Highlands. He can win easily for BN in Cameron Highlands. If BN gives the seat to MIC sure will lose. BN will be digging its own grave if MIC were given the seat for Cameron."

  3)

  Nirmal Kaur  "We want TAN SRI M. KAYVEAS FOR P078 CAMERON HIGHLANDS"

  4)

  Mohd Faizan "TS kayveas will be candidates Cameron highland, sebagai anak pahang we want ts be our leaders"

  5)

  Zulzorro Ali  "Kerusi Cameron Highlands Wajar Diberi Kpd MyPPP utk meneruskan kemenangan BN"

  6)

  Parmjit Kaur Sidhu  "We are with you Tan Seri"

  7)

  Eddy Chew  "Talking about Cameron Highlands "Winnable" candidate? Can't think of anyone accept, Tan Sri Kayveas c/o Uncle Bond ! Just mentioned "Uncle Bond" the popularity are unbelievable that's including all the orang asal communities, no second thought about it, Tan Sri Kayveas c/o Uncle Bond the whole of Cameron Highlands communities, indeed have chosen you to be their true and genuine Community Leader!"

  8)

  Thayalan Pillay "Great Sir. Look great Chinese community very happy with Tan Sri"

  9)

  Raja Segaren  "Tan Sri u r doing great in Cameron Highlands"

  10)

  Yamuna Aarumugam "Tan sri Kayveas the great Everest"

   

   

   

  பின்செல்