ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மைபிபிபி உச்சமன்றக் கூட்டத்தில் ஒருமனதாக உறுதி முடிவு கேமரன்மலை நாடாளுமன்றத்தில்தான் போட்டி!

  மைபிபிபி உச்சமன்றக் கூட்டத்தில் ஒருமனதாக உறுதி முடிவு கேமரன்மலை நாடாளுமன்றத்தில்தான் போட்டி!

  17/04/2018

  img img

  ரதி முனியாண்டி

  படம்: ஜனாதிபன் பாலன்

  கோலாலம்பூர், ஏப். 18: தேசிய முன்னணியுடனான உறவை மைபிபிபி தொடரும் என்று மைபிபிபி உச்சமன்றக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது என மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம.கேவியஸ் அறிவித்தார்.

  ஆனாலும், இந்த முடிவானது தேசிய முன்னணித் தலைவருக்கும் மைபிபிபி தேசியத் தலைவருக்குமான இறுதி சந்திப்புக்குப் பின்னர் மறுபரிசீலனை செய்யப்படும். இந்த இறுதி சந்திப்பு சீட் ஒதுக்கீடு அறிவிப்புக்கு முன்னர் நடைபெறும் என நேற்று மாலை மைபிபிபி தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. 

  கேமரன்மலையில் பல ஆண்டுகளாக மைபிபிபி களப்பணி ஆற்றி வருகிறது என்பது மறுக்கமுடியாத கூற்றாகும். எனவே, மைபிபிபிக்கு கேமரன்மலை தொகுதி கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் எனவும் உச்சமன்றக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட்டது என டான்ஶ்ரீ கேவியஸ் கூறினார். 

  இதனிடையே, கடந்த 4 ஆண்டுகளாக கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் சேவையாற்றி வரும் டான்ஶ்ரீ கேவியசுக்கு, சிகாம்புட் தொகுதி வழங்கப்படுவது குறித்து வெளிவந்த செய்தியினால், மைபிபிபி உறுப்பினர்களும் கேமரன்மலை மக்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர். 

  அதனைத் தொடர்ந்து கட்சியின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழலில் மைபிபிபி இருக்கிறது என்ற அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பரபரப்பானது. அதோடு, தேசிய முன்னணியிலிருந்து மைபிபிபி வெளியேறலாம் என்றும் நேற்று முன்தினம் தொடங்கி வைரலாகின. 

  கேமரன்மலை மக்களின் தேர்வு மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ கேவியஸ் என்ற நிலை நீடித்துவரும் வேளையில், கேமரன்மலைக்கு சம்பந்தமில்லாத ஒருத்தரை அழைத்து வந்து 'சீட்' வழங்குவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். அதோடு, இத்தனை ஆண்டுகளாக தேசிய முன்னணிக்கு வற்றாத ஆதரவை வழங்கி வருகிறோம். இன்னமும் எங்களுக்கான அங்கீகாரத்தைக் கொடுக்க மறுப்பது நியாயமற்ற ஒன்று என மைபிபிபி உறுப்பினர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

   

  பின்செல்