ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  கேமரன்மலையை டான்ஶ்ரீ கேவியசுக்கு வழங்குங்கள்! மைபிபிபி ஆதரவாளர்கள் கோரிக்கை

  கேமரன்மலையை டான்ஶ்ரீ கேவியசுக்கு வழங்குங்கள்! மைபிபிபி ஆதரவாளர்கள் கோரிக்கை

  17/04/2018

  img img

  படங்கள்: ஜனாதீபன் பாலன் 

  கோலாலம்பூர், ஏப்.18:

  கேமரன்மலையில் 4 ஆண்டுகளாக வியர்வை சிந்திய மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவருக்கு 'சீட்' இல்லை என தேசிய முன்னணி தலைமைத்துவம் தெரிவித்ததால், அதிருப்தி கொண்ட கட்சி உறுப்பினர்கள் நேற்று மைபிபிபி தலைமையகத்தில் முற்பகல் 11.30 மணி முதல் கூடத் தொடங்கினர். 

  பிற்பகல் 2.30 மணிக்கு கட்சியின் அவசர உச்சமன்ற கூட்டத்திற்குப் பின்னர் ஒரு சிறப்புச் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என நேற்று முன்தினம் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஶ்ரீ கேவியஸ் பதிவு செய்திருந்தார். 

  அது மிக முக்கிய அறிவிப்பாக இருக்கக் கூடும் என்று அறிந்த மைபிபிபி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் டான்ஶ்ரீ கேவியஸ் என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு ஆதரவு வழங்குவோம் என்று அலுவலக வளாகத்தின் முன் பல மணி நேரம் காத்திருந்தனர். 

  'நாங்களும் தேமு வாக்காளர்கள்தான்', 'கேமரன்மலை வாக்காளர்களாக நாங்கள் மைபிபிபி கட்சியைத் தவிர யாருக்கும் வாக்களிக்க மாட்டோம்', 'கேமரன்மலையில் கேவியஸ் வேண்டும்' போன்ற பதாகைகளை ஏந்தி அனைவரும் தங்களின் உள்ளக் கிடக்கை வெளிப்படுத்தினர். 

  அவர்களில் தம்பின் தொகுதி மைபிபிபி தலைவரான ராஜா பேசுகையில், 4 வருடம் உழைத்தவரை வேண்டாம் என உதாசீனப்படுத்திவிட்டு, 4 மாதம் தலை காட்டிய புதியவரை கேமரன்மலை வேட்பாளராக நியமனம் செய்வது 100 விழுக்காடு ஏற்றுக் கொள்ள முடியாத செயல் என கண்டனம் தெரிவித்தார். 

  மேலும், தேசிய முன்னணியிலேயே 3 பிரதமர்களின் கீழ் பணியாற்றிய அனுபவமும் முதிர்ச்சியும் டான்ஶ்ரீ கேவியசுக்கு மட்டுமே உண்டு. ஆனால், அவருக்கு 'சீட்' இல்லை என கைவிரித்ததோடு, சிகாம்புட்டில் போட்டியிடுமாறு தெரிவித்திருப்பது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் சொன்னார். 

   

  பின்செல்