ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மனித வாழ்க்கையும் குணமும்

  மனித வாழ்க்கையும் குணமும்

  17/04/2018

  img img

  மனித வாழ்க்கை கீழ்க்காணும் மூன்று வகையானது

  1. பொது வாழ்க்கை 

  2. தன் வாழ்க்கை 

  3. ரகசிய வாழ்க்கை 

   

  முதல் இரண்டு வாழ்க்கையிலும் அந்த மனிதனின் குணத்தையும் நடத்தையையும் வெளிக்காட்டுவது இந்த ரகசிய வாழ்க்கையின் பிரதிபலிப்பே ஆகும். 

   

  எனவே, இந்த ரகசிய வாழ்க்கையில் அந்த மனிதனின் குணங்கள் எவ்வாறு நல்ல திசையில் பக்குவப்பட்டிருக்கிறது, பயணிக்கிறது என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ரகசிய வாழ்க்கையை ஒரு மனிதன் மிகச்சில விழுக்காடுகள். தன் பெற்றோரிடமோ தன் துணையிடமோ பகிர்கிறான். எனவே அந்தத் திசையை மேம்படுத்தி வெற்றி பெறுவது அவரவர் கையில் மட்டுமே உள்ளது. 

   

  ஓர் உதாரணம். ஒருவர் தனியாக சாப்பிட்டு பழகியவர். யாருடனும் சேர்ந்து சாப்பிடும் பழக்கமில்லாதவர். சிறிது சிறிதாக அதையே தன் ரகசிய வாழ்க்கையில் பழகிவிட்டவர் தனக்கு திருமணமானவுடன் தன் பொது வாழ்க்கையில், தன் வாழ்க்கையில் யாருடனும் சாப்பிடுவதை அசௌகரியமாக உணருகிறார், தன்னை ஒளித்துக் கொள்கிறார். புதிதாக திருமணமானவர் எத்தனை வீட்டில் சாப்பிட வேண்டியிருக்கும் என்பதை நீங்கள் அறீவீர்கள் தானே. அந்தப் பெண்ணின் நிலைமை என்னவாகும் உறவினர்கள் மத்தியில்.

   

  ஆக இவரின் இரகசிய வாழ்க்கையின் ஒரு பழக்கம் தன் வாழ்க்கையில் நுழைந்த மனைவியையும், பொது வாழ்க்கையில் வரும் பொது நிகழ்ச்சிகளையும் எத்தனை கொடூரமாகப் பாதிக்கிறது. இதைப்போல் பல உதாரணங்களை நீங்கள் தினமும் பார்ப்பது இயல்பே. 

   

  இந்தக் குணங்களை எதிரில் இருப்பவர்கள் அடையாளம் கண்டு மேம்படுத்த உதவ முயற்சிக்கலாம். ஆனால், இது இரகசிய வாழ்க்கையினை மேலும் பாதிக்கும் வாய்ப்பாக மாற முயற்சி செய்கிறது.  இதற்கு ஒரே தீர்வு, தானே உணர்ந்து மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே நல்லது. எனவே, இரகசிய வாழ்க்கையில் எது நல்லது எது கெட்டது என ஆராயுங்கள். அதை நல்ல திசையில் மேம்படுத்துங்கள். நல்வாழ்க்கை நாளையே திறந்திடும் உங்களுக்காக..........

   

  பின்செல்