ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்

  மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்

  16/04/2018

  img img

  குறிப்பிட்ட கால வரையறைக்குள் நீங்கள் வெற்றி காண வேண்டும் என்றால் நீங்கள் மனதின் இயல்புகளையும் அதை அடக்கும் வழிகளையும் அறிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு பொருளையும் நீங்கள் மனதில் உருவாக்கித்தான், பின்னர் புறத்தில் உருவாக்க முடியும்.

   

  நல்ல எண்ணங்களைப் புகுத்திச் செயல்படச் செய்வதன் மூலம் நீங்கள் விரும்புவதை அடைய முடியும்.

  மனதில் தோற்றுவிக்கப்பட்டு, தொடர்ந்து பதிக்கப்படும் எண்ணங்கள்தான், சம்பவங்களாக உருவாகி, உங்கள் சூழ்நிலையாகவும் உருவெடுக்கிறது.

   

  கடந்தகாலத் தோல்விகளையும், கஷ்டங்களையும், துன்ப துயரங்களையும் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தால் அவையே விரிவடையும். ஆகவே, அவற்றை மறந்து விடுங்கள்.

   

  நிகழ்காலத்தின் அறிகுறிகளோ அடையாளங்களோ, ஆதாரங்களோ எதிராகவும், பாதமாகவும், விரோதமாகவும் இருக்குமானால் எதிர்காலத்தில் நம்பிக்கை வைக்க முடியாமல் போய்விடும். அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

   

  எதிர்காலத்தில் நான் விரும்புவது நடந்தே தீரும்; என் குறிக்கோள் நிறைவேறியே தீரும்; எப்படி என்று தெரியாது; அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை; ஆனால் நான் நம்புவது நடந்தே தீரும், என்னும் அழுத்தமான உறுதியான எண்ணம்தான் உங்களின் ஆணித்தரமான எதிர்காலத்தை அமைக்கும்.

   

  தோல்வி, துன்பம் பற்றிக் கவலைப் படாமல், ஓட்ட வேண்டும், ஓட்ட முடியும் என்னும் எண்ணம்தான் உங்களுக்கு வெற்றி தரும்.

   

   

  பின்செல்