ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  மக்கள் சேவை மகேஸ்வரி சேவை

  மக்கள் சேவை மகேஸ்வரி சேவை

  16/04/2018

  img img

  மலேசியாவின் முதல் சக்தி பீடமான ஶ்ரீ சக்தி ஆசிரமம் கடந்த​ 7ஆம் தேதி ஏப்ரல் மாதம் இவ்வருடம் ஏப்ரல் மாதத்திற்கான​ சேவையை வெற்றிகரமாக​ செய்து முடித்தனர். ஶ்ரீ சக்தி ஆசிரமத்தின் மேலாண்மைக் குழு தங்காக் மற்றும் ஜாசின் வட்டாரத்தில் இச்சேவையைச் செய்தனர்.

  ஶ்ரீ சக்தி ஆசிரமத்தின் மேலாண்மைக் குழுவான​ மஹாசக்தி, அக்னி சக்திகளால் செய்து கொண்டிருந்த​ இச்சேவை கடந்த​ மார்ச் மாதத்திலிருந்து நாடளாவிய​ ரீதியில் குருஜி சேவை மண்டலிகளாலும் செய்யப்பட்டு வருகின்றது. இவர்கள் அனைவரும் பிரியானந்தா சேவைத் திட்டத்தின் கோட்பாடு அடிப்படையில் சமுதாயத்திற்காக சேவையாற்றி வருகின்றனர். நாடளாவிய​ ரீதியில் செய்யப்பட்டு வரும் இச்சேவையின் நோக்கம் தேவையான அடிப்படை​ வசதிகளின்றி வாழும்  மக்களுக்கு உணவு, கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் உதவி கரம் நீட்டுவதே ஆகும்.

  சேவை என்பது பொழுது போக்குக்காக​ மட்டும் செய்வதன்று; ஓய்வற்ற​ நேரத்திலும் சமுதாயத்திற்காக நேரத்தை வகுத்து மனதார​ ஏழை எளியோர்களை நாடி வந்து அவர்களோடு கலந்துரையாடி அவர்களின் சோகத்தில் பங்கு கொள்வதே உண்மையான​ சேவை என​ ஸ்ரீ சக்தி ஆசிரமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான​ குருஜி சக்தி பிரியானந்தா அவர்கள் தம் சீடர்களுக்கு மிகவும் தெளிவாகக்​ கற்றுக் கொடுத்துள்ளார்.

  இவ்வாறான​ சேவைகள் அக்னி சக்தி, குருஜி சேவை மண்டலி போன்றவை​ இளைஞர்களால் செய்யப்படும்போது, இவர்களைக் கண்டு பிற​ இளைஞர்களும் சேவைகளில் தன்னார்வம் கொண்டு சேவைகளில் ஈடுபடுவர். உதாரணத்திற்கு, ஒரு சேற்று நீர் நிரம்பிய குவளையில் தூய்மையான நீர் ஊற்றி வந்தால் சேற்று நீர் வெளியேறி தூய்மையான நீர் மட்டுமே அக்குவளையில் தேங்குவது போல மது, புகை போன்ற பழக்க வழக்கங்களோடு வரும் இளைஞனின் கருணை உணர்வைத் தூண்டி மறுபயனீடு செய்யக்கூடிய பொருட்களைச் சேகரித்து, அதனை விற்று கிடைக்கப் பெறும் பணத்தில் ஏழ்மையில் வாடும் குடும்பத்திற்காக உணவு வாங்கிக் கொடுக்கச் செய்யப்படும்.

  இப்படி ஏழ்மையில் வாடுபவர்களுக்கு உதவி செய்யப்படும் போது கிடைக்கப் பெறும் ஆனந்தமும் சேவை மீது உள்ள ஆர்வமும்  பொதுநல வாழ்க்கைக்கே உருதுணையாக இருக்கும். இதன் மூலம் தீய பழக்கங்களோடு வரும் ஓர் இளைஞன் சமுதாயத்தின் செல்வங்களாக உருமாறுகிறான்.

  அவ்வகையில், வரும் 2018-ஆம் ஆண்டு மே மாதத்தில் நடக்கவிருக்கும் சேவை உள்ளூர் ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள், அரசு சாரா அமைப்புகளுடைய ஒத்துழைப்போடு வெற்றிகரமாக நிகழ்ந்தேர ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம்

  பின்செல்