ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  ஶ்ரீ சக்தி ஆசிரமத்தின் மாத அபிஷேகம்

  ஶ்ரீ சக்தி ஆசிரமத்தின் மாத அபிஷேகம்

  16/04/2018

  img img

  ஶ்ரீ சக்தி ஆசிரமம் கடந்த​ வாரம் ஏப்ரல் மாதத்திற்கான மாத​ அபிஷேகத்தை விமரிசையாக​ நிகழ்த்தினர். இப்பூஜை தோட்டப் புறத்தில் வாழும் மக்களுக்காக​ நடத்தப் படுகின்றது. தோட்டப் புறத்தில் வாழும் மக்கள் அவர்களின் கைகளால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்ய​ வாய்ப்பு வழங்க​ வேண்டும் என்பதே இப்புஜையின் நோக்கமாகும். மக்களும் அவர்களால் முடிந்தவற்றை வாங்கி வந்து அம்பாளுக்கு சமர்ப்பணம் செய்தனர்.

  இவ்வாறு இம்முறை அம்பாளுக்கு அபிஷேகக் கூட்டு அபிஷேகம் என்பதால் அனைவரும் அபிஷேகக் கூட்டால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்தனர். ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். எனவே பக்தர்கள் அனைவரும் அப்பொருட்களைக் கொண்டு வந்து அம்பாளுக்கு தங்களது கைகளால் அபிஷேகம் செய்தனர்.

  சக்தி சம்பிரதாய அடிப்படையிலிருக்கும் ஶ்ரீ சக்தி ஆசிரமத்தின் நோக்கமே சாக்த​ சமயத்தை மலேசியா முழுவதும் பரப்புவதே ஆகும். இவ்வாறு அம்பாளுக்கு அபிஷேகம் செய்ய மக்களுக்கு​ ஶ்ரீ சக்தி ஆசிரமம் வாய்ப்பு வழங்குவதைக் கண்டு பிற​ ஆலயங்களும் இம்முறையைப் பின்பற்றுவர்.

  மேலும், தொடர்ந்து வரும் பூஜைகளிலும் அபிஷேகங்களிலும் மலேசியா​ முழுவதுமுள்ள பக்தர்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு சிறப்பிப்பர் என​ பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.

   

  பின்செல்