ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  சவால்களை ஏற்று சரித்திரம் படைப்போம்! டான்ஶ்ரீ கேவியஸ் வாழ்த்து

  சவால்களை ஏற்று சரித்திரம் படைப்போம்! டான்ஶ்ரீ கேவியஸ் வாழ்த்து

  16/04/2018

  img img

  ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு பிறக்கிறது. அப்போது நாம் ஏதாவது ஒரு புதிய திட்டத்தை மனத்தில் பதியச் செய்து பயணத்தைத் தொடங்குவோம். அதுபோல, இன்றும் இன்னொரு புதிய வருடம் பிறந்துள்ளது. ஒவ்வொரு புதிய தொடக்கமும் சவால் நிறைந்த ஒன்றாக இருக்கும். அந்தச் சவால்களை மனத்திடத்துடன் ஏற்று சரித்திரம் படைக்க வேண்டும் என்பதை விளம்பி புத்தாண்டின் சிந்தனையாகக் கொள்வோம் என மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் கூறினார்.

  வாழ்க்கைப் பயணம் எவ்வாறு அமையப்போகிறது என்பதை தீர்மானிப்பவர்களே நாம்தாம். அந்த அளவிற்கு நமது வாழ்க்கை மீதான திட்டமிடல்கள் அமைந்திருக்க வேண்டும். 'கோடு போட்டால், ரோடு போடுவேன்' என்ற பலர் வழக்குமொழியில் பேசுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். கேட்பதற்கு சிரிப்பாக இருக்கலாம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் நாம் அப்படித்தான் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

  இன்றைய உலகமயமாதலில் நாம் பின்தங்கி இருக்கிறோம் என்பதை உணரக்கூடிய விழிப்புணர்வைக் கொடுப்பதற்குக் கூட ஆளில்லை. இந்தியர்களுக்குத் தேவையானவற்றை இன்னும்கூட போராடித்தான் பெற்றுக் கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றிக் கொள்ளக்கூடிய ஒவ்வொன்றும் சரித்திரம் நிறைந்ததாக இருக்க வேண்டும். போராடுவோம்; சரித்திரம் படைப்போம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

   

  பின்செல்