ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  சூரியனை நெருங்கிச் சென்று ஆராயும் விண்கலம்: ஜூலை 31இல் பாய்கிறது!

  சூரியனை நெருங்கிச் சென்று ஆராயும் விண்கலம்:  ஜூலை 31இல் பாய்கிறது!

  09/04/2018

  img img

  வாஷிங்டன், ஏப்.10: சூரியனின் மேற்பரப்பினை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள பார்க்கெர் விண்கலம் வரும் ஜூலை மாதம் 31 ஆம் தேதி 'டெல்டா-4' ராக்கெட்  மூலம் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 

  இது சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்கு அனுப்பப்படும் முதல் விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது.  சூரியக் குடும்பத்தில் உள்ள பல கோள்களை ஆராய விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன.  சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களில் ரோவர் கருவிகள் தரையிறக்கப்பட்டும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 

  ஆனால், சூரியனை ஆராய மட்டும் இதுவரை விண்கலங்கள் அனுப்பப்படாமல் இருந்தது. சூரியனின் மேற்பரப்பை ஆராய வேண்டுமானால் அதிகளவிலான வெப்பம் மற்றும் கதீர்வீச்சு தாங்கும் விண்கலங்களை உருவாக்க வேண்டும். 

  இதற்காக தற்போது பார்க்கெர் என்ற விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா உருவாக்கியுள்ளது.  இந்த விண்கலம்  தற்போது விமானப்படை விமானம் மூலம் புளோரிடா கொண்டு செல்லப்பட்டுள்ளது.

  மிகவும் சக்தி வாய்ந்த டெல்டா 4 ராக்கெட் மூலம் இந்த விண்கலத்தை வரும் ஜூலை 31ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட பிறகு சூரியனின் ஒளி வட்டத்திலிருந்து 98 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்று வட்டப் பாதையில் சுற்றி ஆய்வை மேற்கொள்ளும்.

  இதுவரை எந்த விண்கலமும் சூரியனுக்கு இவ்வளவு நெருக்கமாக சென்றதில்லை. மிக அதிகமான வெப்பம், கதிர்வீச்சை தாங்கிக் கொண்டு இந்த விண்கலம் சூரியப் புயல் பற்றி அடிப்படை அறிவியல் தகவலை தெரியப்படுத்தும்.

   

  பின்செல்