ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  உழைப்பே உயர்வு தரும்

  உழைப்பே உயர்வு தரும்

  26/03/2018

  img img

  கொதிக்கும் நீர் கொஞ்சம் சுடுநீராகி

  பனி நீராகி பன்னீராவது போல

  குதிக்கும் சிறார் கொஞ்சும் குழந்தையாயிருந்து

  வாலிபனாகி இளைஞராகியிருப்பார்

  வஞ்சம் தீர்க்கும் நெஞ்சினராய் இலாது

  பஞ்சம் போக்கும் நெஞ்சினது இருக்கையில்

  நஞ்சு அறியா பஞ்சுமக்கள் தஞ்சம் பெற

  துஞ்சாது நாடி வருகிறது மைபிபிபி

  நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வையும்

  வீறுகொண்ட உழைப்பை என்றும் ஏந்திடுவர்

  அமர்ந்த நிலையில் சமர்புரியும் சாயலில்லை

  நாள்தோறும் நம்மவர் செய்திடும் நற்சேவை

  மலர்ந்த முகமும் மாண்புடை பணிவும்

  தூய துணிவும் கொண்டனர் மைபிபிபியினர்

  உலர்ந்திடாத சேவைக்கு ஒருசுடர் தருவாம்

  இதன் தனிப் பெரும் தலைவர் கேவியஸ்

  இனியில்லை தயக்கம் வேண்டாம் மனமயக்கம்

  பணி செய்து கிடப்பதே நம்மவர் முழுகடமை

  தனி வரலாறு படைப்போம் உலகம் இதைவியக்கும்

  நனிசிறக்க உழைப்போம் வளர்வோம் உயர்வோம். 

  வித்தகன், தலைநகர்

   

  பின்செல்