ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  எதிர்க்கட்சியின் ஒழுங்கற்ற நிலையை தேமுவுக்கு சாதகமாகப் பயன்படுத்துங்கள்!

  எதிர்க்கட்சியின் ஒழுங்கற்ற நிலையை தேமுவுக்கு சாதகமாகப் பயன்படுத்துங்கள்!

  16/03/2018

  img img

  பாசிர் பூத்தே, மார்ச் 17: ஒழுங்கற்ற நிலையில் இருக்கும் எதிர்க்கட்சியினரின் இந்தச் சூழலை லாபகரமாகப் பயன்படுத்தி மக்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி, தேசிய முன்னணியின் தேர்தல் கேந்திரத்திற்கு வலியுறுத்தினார். 

  தேசிய முன்னணியும் அம்னோவும் கிளந்தான் மாநில ஆட்சியுரிமையை மீண்டும் கைப்பற்றுவதற்கு இதுவே சரியான தருணம். ஒழுங்கற்ற எதிர்க்கட்சிக்கு பிரியாவிடை செய்வதற்கான நேரம் வந்துவிட்டது.  

  நாடாளுமன்றத்தில் 2/3 இருக்கைகளை வென்றிட வரும் 14ஆவது பொதுத் தேர்தலின் வழி இம்மாநிலத்தில் 5 இருக்கைகளை கைப்பற்ற வேண்டும். இந்த வெற்றியை உறுதி செய்யும் வகையில் தேமு தேர்தல் கேந்திரங்கள் உழைக்க வேண்டும் என்று தேமுவின் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடி சொன்னார்.

  கிளந்தானில் போட்டியிடும் தேமு வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் கிளந்தான் அம்னோ பிரிவின் தொடர்புத்துறை தலைவர் டத்தோஶ்ரீ முஸ்தாப்பா முகமட் இம்மாநில ஆட்சித் தலைவராக இருந்து தேமுவை பிரதிநிதித்து பல்வேறு உருமாற்றங்களை இங்கே ஏற்படுத்துவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

  இங்குள்ள அம்னோ காம்ப்ளெக்சில் நடைபெற்ற மக்களுடன் தலைவர் நிகழ்வில் உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு பேசினார். இதனிடையே, பாசிர் பூத்தே நாடாளுமன்றத் தொகுதியில் வாழும் தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவும் வகையில் 500,000 வெள்ளியும் இங்குள்ள ஏழ்மையானர்வர்களின் வீடுகள் சீரமைப்பு பணிக்கு 2 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடும் வழங்கினார்.  

   

  பின்செல்