ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் நாட்டின் கடனை வெ.416 பில்லியனாக அதிகரிக்கும்!

  நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் நாட்டின் கடனை வெ.416 பில்லியனாக அதிகரிக்கும்!

  13/03/2018

  img img

  ஆராவ், மார்ச் 14:

  14ஆவது பொதுத்தேர்தலை முன்னிட்டு தங்களது தேர்தல் வாக்குறுதியில் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி), டோல் முதலானவை நீக்கப்படும் என நம்பிக்கைக் கூட்டணி அளித்திருக்கும் வாக்குறுதிகள் நாட்டின் கடனை 416 பில்லியன் வெள்ளியாக அதிகரிக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

  இதற்கு முன்பு இருக்கின்ற கடன்களைச் சேர்க்காமல் ஜிஎஸ்டி, டோல்களை மட்டும் நீக்குவதன் வாயிலாக 383 பில்லியன் வெள்ளி வருவாயை அரசாங்கம் இழக்க நேரிடும். 

  இந்த வருமான இழப்பின் வாயிலாக நாட்டின் மேம்பாட்டில் ஒரு பகுதியை அமல்படுத்த முடியாத நிலை ஏற்படும் என நேற்று 2018ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தொடர்பில் மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், இளைஞர்களுடனான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறினார்.

  நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் பயங்கரமாக உள்ளன. இதனால், நாட்டின் கடன் அதிகரித்து அதனை வருங்கால தலைமுறையினர் சுமக்க வேண்டியிருக்கும். அதனால் மக்களை நாம் ஏமாற்ற முடியாது. எங்களால் முடிந்தவற்றை நாங்கள் செய்கின்றோம். முடியாதவற்றை மக்களிடம் தெரிவிக்கின்றோம்.

  நாங்கள் எப்பொழுதும் மக்களைப் பற்றி சிந்திக்கின்றோம் என்பதை நம்புங்கள். காரணம், எங்களின் கொள்கை மக்களுக்கு முன்னுரிமை வழங்குவதாகும். ஒரு நாட்டில் மக்களுக்கு எல்லாமே இலவசமாக வழங்கப்பட்டால் அந்நாடு பின்னடைவை சந்திக்கும். ஏனென்றால், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையாது. கடந்தாண்டு உலகிலேயே நமது நாட்டின் பொருளாதார அடைவுநிலை மிக அதிகமாக 5.9 விழுக்காடாக இருந்தது. பொருளாதாரம் வளர்ந்தால்தான் அதிகமான முதலீடுகள் நம் நாட்டிற்குள் நுழையும். இதன் வழி அதிகமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்.

  உலகிலேயே மலேசியாவில்தான் சிறந்த அணுகுமுறைகள் உள்ளன. சில வேளைகளில் அதனை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. அது நமது தவறல்ல. ஆனால், சிலர் வேண்டுமென்றே பொய்யான செய்திகளின் வழி திசை திருப்புகின்றனர். மலேசியர்கள் நடப்பு அரசாங்கத்தின் மீது நம்பிக்கைக் கொள்வதோடு மலேசியா சிறந்த நாடு என்ற இடத்தில் இருப்பதை உணர வேண்டும்.

  வருங்கால தலைமுறையினருக்காக சிறந்த பொருளாதாரத்தை ஏற்படுத்தி வருகிறோம். அடுத்த 56 ஆண்டுகளில் மலேசியா எம்ஆர்டி, அதிவேக ரயில் சேவை (எச்எஸ்ஆர்), துன் ரசாக் பரிமாற்று மையம் (டிஆர்எக்ஸ்) ஆகியவற்றின் வாயிலாக புதிய பொலிவை பெறும் என டத்தோஸ்ரீ நஜிப் குறிப்பிட்டார்.

   

  பின்செல்