ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  அச்சு ஊடக, பதிப்பக சட்டம் மீளாய்வு செய்யப்படும்!

  அச்சு ஊடக, பதிப்பக சட்டம் மீளாய்வு செய்யப்படும்!

  13/03/2018

  img img

  படம்: ஜனாதிபன் பாலன் 

  புத்ராஜெயா, மார்ச் 14:

  நடப்பு சூழலுக்கு ஏற்ப அச்சு ஊடக, பதிப்பக சட்டம் 1984 அமைந்திருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் அச்சட்டத்தை மீளாய்வு செய்யும் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். 

  தற்போது சமூக ஊடகங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கை காலத்தின் கட்டாயமாகக் கருதப்படுகின்றது. உள்துறை அமைச்சு எழுத்து, பதிப்பகம், திரையிடல் சுதந்திரத்தை வழங்க நினைக்கிறது. வழிகாட்டிகளினால் அதற்கு நெருக்குதல் அளிக்க விரும்பவில்லை. 

  வழிகாட்டிகள் அக்காலத்திற்கு ஏற்றவையாக அமைந்தன. ஆனால், இன்று ஊடக நெறிமுறைக்கு பங்கம் விளைவிக்காமல் அவை சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

  ஆகக் கடைசியாக 2012ஆம் ஆண்டு அச்சு ஊடக, பதிப்பக சட்டம் 1984இல் திருத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

  மேலும் பேசிய டத்தோஶ்ரீ ஸாஹிட், பாரம்பரிய ஊடகங்கள் தற்போது தங்களின் செய்திகளில் அநீதியாக செயல்படுவதாக புகார்கள் குவிகின்றன. பாரம்பரிய ஊடகங்கள் உள்துறையை நண்பர்களாகப் பார்க்க வேண்டும். அந்தத் துறைக்கு நெருக்குதல் அளிப்பவர்களாக இல்லை என்று அறிவுறுத்தினார். 

  "பேனா முனை கத்தி முனையை விட கூர்மையானது. ஆனால், பேனா தற்போது விரல் நுனிக்கு மாறிவிட்டது. இது பாரம்பரிய ஊடகங்களுக்கு மட்டுமன்றி உள்துறை அமைச்சுக்கும் சவாலாக அமைகின்றது" என்றார் அவர். 

   

  பின்செல்