ஃப்ளாஷ் நியூஸ்

  nwsId

  சிலாங்கூரில் நீர் நெருக்கடி நீடித்தால் மத்திய அரசு தலையிடும்!

  சிலாங்கூரில் நீர் நெருக்கடி நீடித்தால் மத்திய அரசு தலையிடும்!

  13/03/2018

  img img

  கோலாலம்பூர், மார்ச் 14:

  சிலாங்கூரில் நிதி நெருக்கடி நீடித்தால், தேசிய பாதுகாப்புக் கருதி அரசாங்கம் நீர் சேவை, தொழில்நுட்பச் சட்டம் 2006 (655)இன் படி தலையிட கோரிக்கை விடுக்கும் என எரிபொருள், பசுமை தொழில்நுட்ப, நீர்வள அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் மெக்சிமஸ் ஓங்கிலி தெரிவித்தார். 

  சிலாங்கூரில் நீர் பற்றாக்குறை நீண்ட காலத்திற்கு தொடர்வதால், அதனை தீர்ப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் அரசாங்கம் களமிறங்கும். 

  தண்ணீர் பற்றாக்குறையை மத்திய அரசாங்கம் அறிவிக்கும் அளவுற்கு நிலைமையை மோசமாக்கி விடக்கூடாது. ஒருவேளை அந்நிலை ஏற்பட்டால், நீர் நெருக்கடி பிரச்சினைகளை மத்திய அரசாங்கமே நேரடியாகக் கண்காணிக்கும் என்றார் அவர். 

   

  பின்செல்